இந்தியா தபால் துறை வங்கி வேலைவாய்ப்பு – 50+ பணியிடங்கள்!!
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) நிறுவனத்தில் காலியாக உள்ள Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 54 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தகுதியும் விரும்பும் உள்ளவர்கள் அனைத்து தகவல்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி காலிப்பணியிடங்கள்:
Executive (Associate Consultant), Executive (Consultant), Executive (Senior Consultant) பணிகளுக்கு 54 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
IPPB வயது வரம்பு:
- Executive (Associate Consultant – 22 முதல் 30 வயது வரை
- Executive (Consultant) – 22 முதல் 40 வயது வரை
- Executive (Senior Consultant) – 22 முதல் 45 வயது வரை
அஞ்சல் வங்கி கல்வித்தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Graduate/ Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பத்தார்களுக்கு 2 முதல் 06 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
IPPB சம்பளம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,00,000/- முதல் ரூ.25,00,000/- வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல் முறை:
நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/PWD (Only Intimation charges) – ரூ.150/-
- For all others – ரூ.750/-
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.ippbonline.com/ என்ற இணைய முகவரி மூலம் 24.05.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment