சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் புதுக்கோட்டை மாவட்ட நீதித்துறையில் நகல் பரிசோதகர், முதுகலை கட்டளை நிறைவேற்றுணர், கட்டளை பணியாளர், மற்றும் ஒளிப்பட நகல் எடுப்பவர் ஆகிய பதவிகளுக்கான நேரடி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு இணையதளம் வாயிலாக மட்டுமே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும்.
பார்வையற்றவர்கள் மற்றும் பார்வை திறன் குறைபாடு உடையவர்கள் மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.
இதில் நகல் பரிசோதனைக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5 ஆகும் . இதற்கான சம்பளம் ரூபாய் 19,500 இல் இருந்து 71,900 ஆகும் . முதுநிலை கட்டளை நிறைவேற்றனர் பணிக்கான காலி பணியிடங்கள் 6 ஆகும். இதற்கான சம்பள விகிதம் 19,500 ரூபாயிலிருந்து 71,900 ஆகும். கட்டளை பணியாளர் பணியிடத்திற்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 14 ,இந்த பணியிடத்திற்கான சம்பளம் 19,000 முதல் 69,900 வரை ஆகும். இறுதியாக ஒளிபட நகல் எடுப்பவர் இதற்கான காலி பணியிடங்கள் 2 எண்ணிக்கை ஆகும். இதற்கான சம்பளம் 16,600 ரூபாயிலிருந்து 60,800 ரூபாய் வரை ஆகும்.
விண்ணப்பதாரர்கள்01.07 2024-ஆம் தேதியில் 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். நகல் பரிசோதகர் முதுநிலை, கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை பணியாளர், இவர்களுக்கான கல்வி தகுதி குறைந்தபட்ச பொது கல்வி தகுதி அதாவது, எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது உயர்நிலைப் படிப்புகளில் கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஒளிப்பட நகல் எடுப்பதற்கான கல்வி தகுதி, பொது கல்வி தகுதி அதாவது எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஜெராக்ஸ் இயந்திரத்தை இயக்குவதில் ஆறு மாதங்களுக்கு குறையாத செய்முறை முன் அனுபவம் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் மற்ற வகுப்பினை சார்ந்தவர்களுக்கு ஒவ்வொரு பதவிக்கும் ரூபாய் 500 தேர்வு கட்டணம் ஆகும்.ஆதிதிராவிட வகுப்பினர் பழங்குடியினர் ஆகிய வகுப்பினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in இந்த இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் . பணிகள் குறித்த மேலும் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி 27.05.2024 ஆகும். தேர்வு கட்டணத்தை செலுத்த கடைசி தேதி 29.05.2024 ஆகும்
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment