சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட நீதி மன்றத்தில் காலியாக சில பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, சம்பளம் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
விருதுநகர் மாவட்ட நீதித்துறையின் அறிக்கைப்படி மொத்தமாக 53 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதில் அலுவலக உதவியாளர் ( office assistant) - 41 இடங்கள், காவலர் - 5 இடங்கள், இரவு நேர காவலர் - 1 , மால்ஜி - 6 என 53 காலிப்பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது.
தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
மற்ற பணியிடங்களுக்கு எழுத படிக்க தெரிந்திருந்திருந்தாலே போதும்.
ஊதியம் பொருத்தவரை அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் தோறும் 15000 முதல் 58000 வரை தகுதி அடிப்படையில் வழங்கப்படும். மற்ற பணியிடங்களுக்கு தகுதி அடிப்படையில் 15000 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு: பி.சி / எம்.பி.சி பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். அதே போல விண்ணப்பதாரர் 1.7.2006 க்கு பின்னர் பிறந்தவராக இருக்க கூடாது. 1.7.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.mhc.tn.gov.in என்ற வலைதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்கும் போது பி.சி / எம்.பி.சி பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக 500 ரூபாயை செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மே 27 ஆகும்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
0 Comments:
Post a Comment