தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தற்போது கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளது. ஜுன் 2 வது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு காரணமாக இந்த பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ள. 2024-25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருவதால் தலைமை ஆசிரியர் இல்லாமல் இந்தப் பணிகள் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் விரைந்து தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மற்ற ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment