Search

சென்னை மாவட்ட நீதித்துறையில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்

 தமிழ்நாட்டில் உள்ள சென்னை மாவட்ட நீதித்துறையில் காலியாக , உள்ள நகல்பிரிவு உதவியாளர் (Xerox Operator), அலுவலக உதவியாளர் (Office Assistant), நகல் பரிசோதகர்(Examiner) உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 27ம் தேதிக்குள் (27/05/2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள்:

பதவியின் பெயர்

காலிப்பணியிடங்கள்

தேர்வு அறிவிப்பு

ஓட்டுநர்

10

ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்

நகல்பிரிவு உதவியாளர், அலுவலக உதவியாளர்

115

ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்

(1) தூய்மை பணியாளர் (Cleanliness Worker)(2) தோட்டப் பணியாளர் (Gardener)(3) காவலர் (Watchman)(4) காவலர் மற்றும் மசால்ஜி (Watchman-cum-Masalchi)

(5) துப்புரவு பணியாளர் மற்றும் மசால்ஜி  (Sweeper-cum-Masalchi)(6)வாட்டர்மென்   (Waterman)(7)வாட்டரவுமன்  (Water Woman)(8) மசால்ஜி (Masalchi) | 52 | ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ் | | (i)நகல் பரிசோதகர் (Examiner),(ii) இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff)(iii) கட்டளை எழுத்தர் (Process Writer) மற்றும்(iv) ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator) | 14 | ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ் |

ஒவ்வொரு பதவிக்குமான காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில்  தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆகவே, பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்

விண்ணப்பம் செய்வது எப்படி?

https://www.mhc.tn.gov.in   என்ற இணைய முகவரியில் சமர்ப்பிக்கப்படும்  விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். வேறெந்த முறையிலாவது, அதாவது தபால், கூரியர், பதிவுத் தபால் மற்றும் மின்னஞ்சல் போன்றவை மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எந்த சூழ்நிலையிலும், எந்த காரணத்திற்காகவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பதாரர்கள் கணினி அல்லது மடிக்கணினியின் வாயிலாக மட்டுமே இணையதளம் மூலமாக அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க வேண்டும் கைபேசி (Cellular Phone)  வரைபட்டிகையின் (Tab) மூலம் விண்ணப்பிக்க இயலாது, ஏனெனில் விண்ணப்பப் படிவம் கணினி மற்றும் மடிக்கணினியின் வாயிலாக மட்டுமே பதிவு செய்ய ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment