தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 10.06.2024 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.
Senior Research Fellow
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : M.Sc Biotechnology/ Microbiology/ Animal Biotechnology/ M.V.Sc படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 43,400
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tanuvas.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
முகவரி : Department of Veterinary Parasitology, Madras Veterinary College, Chennai - 600007
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 10.06.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tanuvas.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment