Search

டயட் இல்லாமல் உடற்பயிற்சி இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்கலாம்.. எப்படி தெரியுமா..?

 பலர் உடல் எடையைக் குறைக்க குறைவான உணவை உண்கின்றனர் அல்லது பசியுடன் இருப்பதன் மூலம் விரைவாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கின்றனர். இந்த வழியில் நீங்கள் உங்கள் எடையை குறைக்கலாம், ஆனால் குறைவாக சாப்பிடுவது அல்லது பசியுடன் இருப்பது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும். சரியான உணவுமுறையை எடுத்துக் கொள்ளாததால், உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது, அதனால் உங்கள் உடல் பலவீனமடையும்.

அதுமட்டுமின்றி உங்கள் உடலின் எலும்புகளும் பலவீனமடையும். எனவே உங்கள் எடையை குறைக்க விரும்பினால், முக்கியமாக  தொப்பையை குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் சில பழங்களை சேர்த்துக்கொள்ளலாம். அது உங்கள் எடையைக் குறைக்கும். அதே நேரம் சத்துக்குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.  தொப்பையை குறைக்க உதவும் பழங்களை சொல்கிறோம்.

கிவி: உடல் எடையை குறைக்கும் உணவுகளில் ஒன்று கிவி பழம்.  கிவியில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, கிவி விதைகள் செரிமானத்திற்கும் உதவுகிறது. அதே நேரத்தில், கிவியில் கரையக்கூடிய நார்ச்சத்து காணப்படுகிறது. இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவும். மறுபுறம், நீங்கள் இனிப்பு சாப்பிட விரும்பினால், சக்கரைக்கு பதிலாக கிவி பழத்தை சாப்பிடலாம்.

ஆப்பிள்: தொப்பையை குறைக்க ஆப்பிள் பழம் உதவும் என்று உங்களுக்கு தெரியுமா? ஏனென்றால், ஆப்பிளில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது உங்கள் செரிமான அமைப்பை நன்றாக வைத்திருக்க உதவுவதோடு எடையைக் குறைக்கவும் உதவும். அதுமட்டுமின்றி தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் நோய்களில் இருந்தும் விலகி இருக்கலாம், மேலும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

பப்பாளி: பப்பாளி சாப்பிடுவது எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகிறது. பப்பாளியில் அதிகப்படியான  நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது நம் உடலுக்கு மிகவும் நன்மையை விளைவிக்கும். அதுமட்டுமின்றி இது சரியான செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது.

வாழைப்பழம்: வாழைப்பழத்தில் கோலைன் இருக்கிறது. அதோடு இதிலிருக்கும் பி விட்டமின்கள் அடிவயிற்றில் சேர்ந்திருக்கக்கூடிய கொழுப்பைக் கரைத்திடும். மதுப்பழக்கம் உடையவர்களுக்கு கல்லீரலைச் சுற்றி கொழுப்பு படிந்திருக்கும் அதனை கரைக்கவும் வாழைப்பழம் பயன்படும்.


🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment