ஆண்டுதோறும் புதுச்சேரியில் சுமார் பன்னிரண்டாயிரம் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெறுகின்றனர். இதில் சராசரியாக 90 சதவீதம் பேர் மருத்துவம் பொறியியல் கலை அறிவியல் படிப்புகளை நோக்கிச் செல்கின்றனர்.
ஆனால் குறுகிய காலத்தில் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு வேலைவாய்ப்பு தரும் படிப்பு பக்கம் யாரும் செல்வது இல்லை.
ஏனென்றால் புதுச்சேரியில் உள்ள பாலிடெக்னிக் என்று சொல்லக்கூடிய தொழில்நுட்ப கல்வி படிக்க மாணவ மாணவிகளுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை என்று கூறப்படுகிறது. புதுச்சேரியை பொறுத்தவரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி புதுச்சேரியில் ஒன்றும், காரைக்காலில் ஒன்றும் உள்ளது. இது மட்டுமல்லாமல் இரண்டு தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளும் உள்ளது.
ஆனால் இந்த கல்லூரிகள் குறித்தும் இங்கு நடத்தப்படும் படிப்புகள் குறித்தும் போதுமான விழிப்புணர்வு, அரசு மூலமாக மாணவர்களுக்கு ஏற்படுத்தாததால் பாலிடெக்னிக் கல்லூரியில் சேரும் மாணவன் சேர்க்கை ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது. சில கல்லூரிகள் மூடும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.
தொழில்நுட்பப் படிப்பில் சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், பேஷன் டெக்னாலஜி டெக்னாலஜி, புட் டெக்னாலஜி, உட்பட சுமார் 9 படிப்புகள் உள்ளது. இதில் படித்தால் உடனடியாக வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது.
மேலும் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு பாலிடெக்னிக் படிப்பில் சேர்ந்தால் நேரடியாக இரண்டாவது வருடம் சேரலாம். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்தால் முதலாம் ஆண்டில் சேரலாம். ஆனால் 40% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் உடனடியாக கல்லூரியில் சேர்க்கப்படுகிறார்கள்.
கலை, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை விட குறுகிய காலத்தில் படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு பெற்று கை நிறைய வருமானம் பார்க்கும் இந்த தொழில் படிப்புகள் குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்டாக் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்திவரும் புதுச்சேரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கையை தொடங்கி நடத்த வேண்டும் என்றும் கோரிக்கையும் எழுந்துள்ளது.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment