பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் வெளியாகிவிட்டது தற்போது அனைத்து மாணவர்களும் கல்லூரி தேடுவதில் மும்மரமாக ஈடுபட்டு இருப்பீங்க..தமிழ்நாடு இந்தியா மட்டும் இல்லாம நீங்க வெளிநாடுகளில் போய் படிப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்குது.. வெளிநாடுகளில் போய் படிக்கிறது மூலமாக நமக்கு நிறைய நன்மைகளும் வேலைவாய்ப்புமே அதிகமா கிடைக்கிறது.
இங்க இருக்குற கல்வி முறைக்கும் அங்க இருக்குற கல்வி முறைக்கும் சற்று மாறுபட்டு தான் இருக்கும். உதாரணமாக, பிரிட்டனில் ஓராண்டு காலத்திற்குள் முதுநிலைக் கல்வி பயிலவும் வாய்ப்புண்டு. வெளிநாடுகளுக்குச் சென்று பயிலும் மாணவர்கள் வரிசையில் தமிழ்நாடு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது ஏறத்தாழ 7% மாணவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பயில ஆர்வம் காட்டுகின்றனர்.
வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரம் என்ன? எங்கு, என்ன படிப்புகளை எடுத்துப் பயிலலாம்? என்ன மாதிரியான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்? நுழைவுத் தேர்வு அல்லது தகுதித் தேர்வுகள் எழுத வேண்டுமா? உயர்கல்வி ஆராய்ச்சி வாய்ப்புகளை எப்படி அறிந்துகொள்வது? அதற்கான உத்திகள் என்னென்ன? போன்ற தகவல்களை முதலில் தெரிந்து கொள்வோம்.
வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களின் தரம் :
ஒவ்வொரு நாடும் அவர்களது கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலை வெளியிடுகிறது. அவை அரசு அல்லது அரசு அல்லாத தனியார் அமைப்புகள் (பத்திரிகைகள், இதழ்கள், புள்ளிவிவர நிறுவனங்கள் போன்றவை) மூலம் வெளியிடப்படுகின்றன.உலக அளவிலான கல்விநிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் QS World University Ranking எனப்படும்உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் இதில் அதிகக் கவனம் பெற்றது.
வெளிநாடுகளில் பயில வேண்டும் எனத் திட்டமிடும் மாணவர்களுக்கு இந்தத் தரவரிசைப் பட்டியல் மிகவும் உதவியாக இருக்கும்.அதேபோல பிரிட்டனிலிருந்து வெளிவரும் ‘கார்டியன்’ (Guardian) thecompleteuniversityguide.co.uk இணையதளங்களின் தரவரிசைப் பட்டியல் ஓரளவு நம்பகத்தன்மை வாய்ந்தது. கனடா நாட்டின் ‘டைம்ஸ்’ இதழ் வெளியிடும் அந்நாட்டிற்கான தரவரிசைப் பட்டியலையும் நல்ல உதாரணமாகக் கொள்ளலாம்.
வெளிநாடுகளில் உயர்கல்வி பெறத் தகுதித்தேர்வு : இளநிலை, முதுநிலைப் படிப்புகள் இரண்டிற்குமே மதிப்பெண் விகிதம் ஒரு அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால். ஒரு சில நாடுகளுக்கு மொழியறிவுச் சான்றிதழ் மிக முக்கியமானது.
ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பயில ஆங்கில மொழிப் புலமையில் அவர்கள் பரிந்துரைக்கும் தகுதித் தேர்வில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உதாரணத்திற்கு பிரிட்டன். ஆஸ்திரேலியா நாடுகளில் பயில IELTS(International English Language Testing System) எனப்படும் ஆங்கில மொழிப்புலமைத் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலைப் படிப்புகளுக்குக் குறைந்தபட்சம் 6.0 மற்றும் முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளுக்குக் குறைந்தபட்சம் 6.5 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். இந்தத் தேர்வானது கேட்டல் படித்தல். எழுதுதல், பேசுதல் என்ற பிரிவுகளில் மதிப்பிடப்படுவது.இந்தத் தேர்விற்குக் கட்டணம் உண்டு. மேலும் இந்தத் தேர்விற்கான சான்றிதழ் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். என்பதால் அதற்கேற்பத் திட்டமிடுவது நல்லது.
ஆங்கிலப் புலமைத் தேர்வான TOEFL (Test of English as a Foreign Language) சான்றிதழை 119 நாடுகளில் உள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மொழித் தகுதியாக ஏற்றுக்கொள்கின்றன. TOEFL தேர்வு உங்களோட அட்மிஷனுக்கு ரெண்டுல இருந்து மூணு முன்னாடி எழுதி clear பண்ணா போதும். ஆகவே, எந்த நாட்டிற்கு எந்த மொழிப் புலமைத் தேர்வு எழுத வேண்டும் என்று சரிபார்த்துக்கொள்வது மிக அவசியம். பொதுவாக, வெளிநாடுகளில் முதுநிலைப் படிப்புகளை இரண்டு வழிகளில் உதவித்தொகையுடன் விண்ணப்பிக்கலாம்.
1. வெளிநாடுகளில் உள்ள உதவித்தொகைத் திட்டத்திற்கு (Scholarship) விண்ணப்பித்து அதன் வாயிலாகச் செல்வது.
2. சுயநிதி (Self financing) மூலம் வெளிநாடுகளுக்குச் சென்று பயில்வது. 2.000 முதல் 5,000 டாலர் வரை சிறிய உதவித்தொகைகளைப் பல்கலைக்கழகம் அல்லது தன்னார்வலர் அமைப்புகள் வழங்குகின்றன. இவை ஓரளவிற்குச் சுயநிதி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தற்போது முனைவர் ஆராய்ச்சிப் படிப்பிற்கான தெரிந்துகொள்வதில் வாய்ப்புகளைத் சமூக ஊடகங்கள் (Social Media) முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, Linkedin, Twitter, ResearchGate ஆகியவை மூலம் பேராசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் போன்றவை முனைவர் ஆய்வுப் படிப்பிற்கான வாய்ப்புகளை நேரடியாகப் பகிர்கின்றன. ஃபேஸ்புக்கில் இதற்கென உள்ள குழுக்களில் நீங்கள் உறுப்பினராகப் பங்கேற்பதன் மூலம் எளிதாக தகவல்களைப் பெற இயலும்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment