Search

அடுத்து என்ன படிக்கலாம் குழப்பமா? உடனே இந்த நம்பருக்கு டயல் பண்ணுங்க...

 பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்கான கல்லூரி அட்மிஷன்களும் தற்போது தொடங்கி உள்ளது. இதில் சிக்கல் என்னவென்றால் மாணவர்கள் பலருக்கு அடுத்து என்ன படிப்பது ? எங்கு படிப்பது என்ற சந்தேகம் இருக்கும்.

சிலர் இந்த சந்தேகங்களை சரியாக தெரிந்து கொள்ளாமலே ஏதோ கல்லூரியில் சேர்ந்தால் போதும் என்று அருகில் உள்ள கல்லூரியில் சேர்ந்துவிடுகின்றனர். மாணவர்களுக்கு சரியான உயர்கல்வி வழிகாட்டுதல் தர விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் மூலம் மாணவர்களுக்கு இலவசமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நேரில் வந்தோ அல்லது இதற்கென அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டோ ஆலோசனை பெறலாம் என்று கூறப்படுகிறது. மாணவர்கள் கீழ்க்கண்ட எண்களில் உயர்கல்வி ஆலோசனை மையத்தினை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

1. 8072918467
2.7598510114
3.8838945343
4.9597069842

இவை தவிர ஊரக பகுதிகளில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒன்றிய வாரியாக எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு காணலாம்.

அருப்புக்கோட்டை - 8754271045
காரியாபட்டி - 9789560011
நரிக்குடி - 9488591938
ராஜபாளையம் - 9788396946
சாத்தூர் - 7010762308
சிவகாசி -9500205414
ஶ்ரீவில்லிபுத்தூர் -8220846444
திருச்சுழி - 9944762424
வெம்பக்கோட்டை - 9443669462
விருதுநகர் - 9488988222 என்ற எண்களையும் மாணவர்கள் தொடர்பு கொண்டு மாணவர்கள் ஆலோசனை பெறலாம்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

0 Comments:

Post a Comment