அக்சென்ச்சர் நிறுவன வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க! - Agri Info

Adding Green to your Life

May 16, 2024

அக்சென்ச்சர் நிறுவன வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

 சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் முன்னணி மென்பொருள் நிறுவனமான அக்சென்ச்சர் (Accenture) நிறுவனத்தில் குவாலிட்டி இன்ஜினியர் (Quality Engineer) பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான அக்சென்ச்சர் நிறுவனம், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை மற்றும் கோவையில் அக்சென்ச்சர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அக்சென்ச்சர் நிறுவனத்தில் குவாலிட்டி இன்ஜினியர் (டெஸ்டர் - Tester) பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த குவாலிட்டி இன்ஜினியர் பணிக்கு டிகிரி அல்லது இன்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், Selenium, Appium உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி ஆட்டோமேடட்டெஸ்ட் ஸ்கிரிப்ட் உருவாக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் Functional Test Planning தெரிந்திருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு 0 முதல் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் பணியமர்த்தப்படுவார்கள்.

எனவே, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. ஆனால், தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படும் வரை விண்ணப்பங்கள் திறந்திருக்கும். தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் விண்ணப்பங்கள் மூடப்படும். எனவே ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

No comments:

Post a Comment