உலகில் பல்வேறு வகையான பழங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தோற்றத்திலும், நிறத்திலும் வேறுபட்டவை. ஆனால் உடலுக்கு நன்மை பயக்க கூடியவை. அன்றாட உணவில் பழங்களை உட்கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் உண்டாகும்.
இவ்வாறு என்னற்ற பழ வகைகள் இருந்தாலும், மாம்பழம் பழங்களின் ராஜா என அழைக்கப்படுகிறது. காரணம் மாம்பழத்தின் சுவை. தமிழ் இலக்கியங்களிலும் கூட முக்கனிகளில் முதல் கனியாக மாம்பழம் உள்ளது.
ராஜா இருந்தால் ராணியும் இருந்தாக வேண்டும் அல்லவா. அப்போது பழங்களின் ராஜா மாம்பழம் என்றால் பழங்களின் ராணி எது. பழங்களின் ராணி, மங்குஸ்தான். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட பழம். இந்த பழம் தென்கிழக்கு ஆசியாவை பூர்விகமாக கொண்டிருந்தாலும் உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது.
பழங்களின் ராஜாவான மாம்பழம் பிரகாசமாக இருக்க, பழங்களின் ராணியோ சற்று மங்களான தோற்றத்தையே கொண்டுள்ளது. ஆனால் இந்த பழத்தில் அதிக நன்மைகள் நிறைந்துள்ளன. ஹெல்த்லைன் அறிக்கையின்படி, மங்குஸ்தான் பழம் சுவையானது மட்டுமன்றி ஆரோக்கியமானதும் ஆகும்.குறைந்த கலோரிகளை கொண்டுள்ள இந்த மங்குஸ்தான் பழத்தில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மாம்பழத்தில் புரதம், வைட்டமின் சி, பி1, பி2, பி9, தாமிரம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த பழத்தில் 3.5 கிராம் நார்ச்சத்து மற்றும் 1 கிராம் கொழுப்பு உள்ளது.
மாம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் டிஎன்ஏ உருவாக்கம், தசை சுருக்கம், காயம் குணப்படுத்துதல் உள்ளிட்டவற்றை குணப்படுத்த உதவுகிறது. இதேபோல மங்குஸ்தானில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, வயதான எதிர்ப்பு மற்றும் நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளை ஊக்குவிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சில ஆய்வுகள் இந்த பழம் உடல் எடையை குறைக்க உதவுவதாகவும் கூறுகின்றன. மங்குஸ்தான் பழங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் பண்புகளையும் கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment