நாள்:10
தேதி:12-5-2024
படிப்பு: B.SC தாவரவியல் or B.SC (Botany)
பிஎஸ்சி தாவரவியல் படிப்பு பெரும்பாலும் அரசு கல்லூரிகளில் தான் உள்ளது.
தாவரவியல் ஆசிரியர்கள் அதிக அளவில் அரசு பள்ளிக்கு தேவைப்படுகிறார்கள் பெரும்பாலும் மேல்நிலை வகுப்புகளில் தாவரவியல் மற்றும் விலங்கியல் வகுப்புகளை ஒரே பாட ஆசிரியர்களுக்கு பயிற்றுவிக்க கூடிய சூழ்நிலை நிலவுகிறது.
குறிப்பாக பிஎஸ்சி எம்எஸ்சி தாவரவியல் தமிழ் வழியில் படித்தால் உடனடியாக அரசு பள்ளிகளில் இட ஒதுக்கீடு மூலம் ஆசிரியர் பணி கிடைக்கும்
B.SC தாவரவியல் படிப்பிற்கு வேலை வாய்ப்புகள்
1.NEET ஆர்வத்தால் மருத்துவம் படிக்க பலர் விரும்புகிறார்கள் மருத்துவம் கற்பிக்க நீட் பயிற்சி மையங்களில் அதிக அளவில் சிறந்த பாட அறிவு உடைய தாவரவியல் ஆசிரியர் தேவைப்படுகிறார்கள் அப்படி ஆழ்ந்து தாவரவியல் படித்தால் மணி நேரத்திற்கு சம்பளம் வாங்கலாம்
2.B.SC,M.Sc முடித்து SET தேர்வு தேர்ச்சி பெற்றால் தமிழக அளவில் அரசுகல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணி புரியலாம் .
3.B.SC,M.Sc NET தேர்வு தேர்ச்சி பெற்றால் இந்திய அளவில் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணி புரியலாம் .
4.B.SC,M.Sc B. Ed படித்தால் அரசுப் பள்ளிகளில் முதுகலை தாவரவியல் ஆசிரியராக பணிபுரியலாம்.
5.B.SC முடித்து B. Ed படித்தால் அரசுப் பள்ளிகளில் அறிவியல் பட்டதாரிஆசிரியராக பணிபுரியலாம்
6.B.SC,M.Sc.முடித்து M. Ed படித்தால் அரசுகல்வியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியராக பணிபுரியலாம்.
7.B.SC,M.Sc NET JRF தேர்ச்சி பெற்றால் PHD படிக்கும் வரை மாதம் தோறும் கல்வி உதவித்தொகை பெற்று பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் PHD படிக்கலாம்
8.B.SC, BED படித்து CTET தேர்ச்சி பெற்றால் நவயோதயா பள்ளி,மற்றும் மத்திய அரசுப்பள்ளிகளில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆகலாம்
9.M.SC, BED படித்து CTET தேர்ச்சி பெற்றால் நவயோதயா பள்ளி,மற்றும் மத்திய அரசுப்பள்ளிகளில் தாவரவியல் முதுகலைபட்டதாரி ஆசிரியர் ஆகலாம்
10.சூழலியல் நிபுணர் பணி
11.தாவர உயிர்வேதியியல் நிபுணர் பணி சுகாதார துறையில் பணிபுரியலாம்
12.தாவரவியல் தொடர்பான புதிய அம்சங்களைக் கண்டறிவது தொடர்பான ஆராய்ச்சியாளர் பணி
13.சுற்றுச்சூழல் ஆலோசகர் பணி
14.நர்சரியை நிர்வகிப்பதைக் கையாளும் பசுமை இல்ல மேலாளர் பணி
15.மூலக்கூறு அல்லது உடல் மட்டத்தில் விவசாயம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் வழங்கும் விவசாய ஆலோசகராக பணி
16.மூலக்கூறு மற்றும் உயிரின நிலைகளில் உள்ள அம்சங்களின் பரம்பரை ஆய்வு செய்யும் மரபியல் நிபுணர் பணி
17.புவியியல் சூழலில் இருந்து தாவரங்களை மீட்டெடுப்பது மற்றும் அடையாளம் காண்பது குறித்த பழங்கால தாவரவியலாளர் பணி
18.பூங்கா ரேஞ்சர் போன்ற தாவரவியல்
19.டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் குறிப்பிட்ட அளவு வினாக்கள் அறிவியல் பாடத்தில் இருந்து கேட்கப்படுகிறது அந்த வினாக்களை அறிவியல் படித்தவர்கள் மிக எளிதாக விடை அளிக்கலாம்
20.எந்த விதமான போட்டித் தேர்வாக இருந்தாலும் கண்டிப்பாக குறிப்பிட்ட அளவு அறிவியல்வினாக்கள் இடம் பெறுகிறது அதற்கு அறிவியல் படித்தவர்கள் மிக எளிதாக விடை அளித்து பணி வாய்ப்புகளை பெறலாம்
B.SC தாவரவியல் படிப்பு உள்ள சில கல்லூரிகள்
1)அரசு கலை அறிவியல் கல்லூரி,சேலம்
2)C.N.C கல்லூரி (அரசு உதவிபெறும் கல்லூரி),ஈரோடு
3)அரசு கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல்.
4) JKKN கல்லூரி(அரசு உதவிபெறும் கல்லூரி),குமாரபாளையம்
5) சாரதா கல்லூரி(அரசு உதவிபெறும் கல்லூரி) ,சேலம்.
6)ஈரோடு கலைக்கல்லூரி,
(அரசு உதவிபெறும் கல்லூரி)
7)ஈரோடு வெள்ளாளர் கல்லூரி,
(அரசு உதவிபெறும் கல்லூரி)
8)அரசு கலை அறிவியல் கல்லூரி-சேலம்
கட்டணம்: இந்த கல்லூரிகளில் ஆண்டுக்கு அதிகபட்சம் இரண்டாயிரத்திற்குள் இருக்கலாம்
குறிப்பு
இங்குள்ள கல்லூரிகள் சேலம் ,நாமக்கல் ,ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் சில கல்லூரிகள் ஆகும் இதே போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் இருக்கும் அந்த கல்லூரிகளை தேர்வு செய்தால் கட்டணம் மிக மிகக் குறைவு ஆண்டுக்கு இரண்டாயிரத்திற்கு குறைவாக இருக்கும் ஆனால் தனியார் கல்லூரியில் படித்தால் குறைந்தபட்சம் வருடத்திற்கு 30ஆயிரத்திற்கு மேல் செலவாகும்
வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
தொடர்புக்கு & இலவச கல்வி மேற்படிப்பு ஆலோசனைக்கு அழைக்க : 9080290529
நேரம்: மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
0 Comments:
Post a Comment