விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா வெளியிட்ட செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வலர்களாக தற்காலிக பணிபுரிய நேர்முக தேர்வு நடக்கவுள்ளது. இந்த தேர்வில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தோர் விண்ணப்பிக்கலாம்.
அவர்களில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், டாக்டர்கள், சட்டக்கல்லுாரி மாணவர்கள் (வழக்கறிஞராக பதியும் வரை), அரசு சாரா அமைப்பை சேர்ந்தோர், அரசியல் அல்லாத உறுப்பினர்கள், சுற்றுப்புற குழுக்களின் பெண் உறுப்பினர்கள், சுயஉதவி குழுக்களைச் சேர்ந்தோர், ஓரங்கட்டப்பட்ட மற்றும் பாதிக்கக்கூடிய குழுக்களின் உறுப்பினர்கள் ஆகியோர் சட்ட தன்னார்வலர்களாக தகுதியுடையவர் ஆவர்கள்.
🔻🔻🔻
No comments:
Post a Comment