பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு சக்ஸம் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் மூலமாக கல்லூரி படிப்பு பயில்வதற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் எவ்வாறு பயனடைவதை தெரிஞ்சுக்கோங்க..
தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்புத் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், கல்லூரி மேல்படிப்பிற்காக எந்த துறையைத் தேர்ந்தெடுக்கலாம் எந்த கல்லூரியில் படிக்கலாம் என்று மாணவ, மாணவிகள் யோசித்தும் பல கல்லூரிகளில் விண்ணப்பங்களையும் நிரப்பி வருகின்றனர்.
இந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரையில் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் வழக்கம் போல அதிக மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் தங்களது கல்லூரி படிப்பை பயில மத்திய மற்றும் மாநில அரசுகளும் பல்வேறு சலுகைகள் வழங்கிவருகிறது.
இதன் ஒரு பகுதியாக அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் (Diploma) டிப்ளமோ, பட்டப்படிப்புகளைப் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு சக்ஸம் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது. www.aicte-pragati-saksham-gov.in இந்த இணையதள முகவரியை பயன்படுத்தி பயனடையுங்கள்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment