அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை துவக்கம்.. விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ - Agri Info

Adding Green to your Life

May 21, 2024

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை துவக்கம்.. விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ

 அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2024ஆம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பத்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10.05.2024 முதல் 07.06.2024 முடிய விண்ணப்பங்கள் பதிவு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்விற்கான தரவரிசைப்பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் அரசு தொழிற்ப்பிற்சி நிலையம் :


விழுப்புரம் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் தெரிந்துகொள்ளwww.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தினை பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் பொழுது தங்களது அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் மற்றும் இடப்பெயர்வு சான்றிதழ் ஆகியன பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

உதவித்தொகையுடன் (On the Job Training)தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750/- உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாடப் புத்தகம், மூடு காலணி, சீருடை, சீருடைக்கான தையற்கூலி, வரைபடக்கருவிகள், ஆடவர் தங்கும் விடுதி மற்றும் இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.

மேலும், பயிற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் On the Job Training ஆனது உதவித்தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழிற் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துதரப்படும். இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம் ரூ.50/- ஐ விண்ணப்பதாரர் Debit card/ Credit Card / Net Banking/ UPI வாயிலாக செலுத்தலாம் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் : 07.06.2024. மேலும், விபரங்களுக்கு 9380114610, 8072217350, 9789695190 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்பழனி தெரிவித்துள்ளார்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

No comments:

Post a Comment