10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், மாணவர்கள் தாங்கள் என்னவாக ஆக வேண்டும் என்ற கனவுக்கான விதையை விதைக்கும் நேரம் இது. ஏனென்றால், இது உங்களுக்கான முக்கிய காலகட்டம். உங்கள் கேரியர் சிறப்பாக அமைய உங்களுக்கான பாதையை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒரு வேலை உங்களுக்கு விமானி (Pilot) ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தால், உங்களுக்கான சில குறிப்பை இங்கே நாங்கள் கூறுகிறோம். இந்த குறிப்பு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 12 ஆம் வகுப்புக்கு பின்னர் நீங்க பைலட் பயிற்சிப் படிப்பைத் தொடரலாம் . பைலட் ஆவதற்கு தேவையான தகுதிகள், பயிற்சி விவரங்கள் மற்றும் பயிற்சி கட்டணம் , குறித்த பல்வேறு தகவல்கள் பற்றிய செய்தி தொகுப்பு.
பைலட் பயிற்சியில் சேருவதற்கு ஏதாவது பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 12ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப் பிரிவுகளை எடுத்துப்படித்திருக்க வேண்டும். மாணவர்கள் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார்களா என்பதும் தெளிவான கண்பார்வை இருக்கிறதா என்பதும் முக்கியம்.
இந்தப் பயிற்சியில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன, முதல் கட்டமாக 20 மணி நேரம் பயிற்சிஅளிக்கப்படும், அப்புறம், தனியே விமானம் ஓட்டும் திறன் இருக்கிறதா என்று ஆராயப்படும் இதையடுத்து ஏர் ரெகுலேஷன், ஏர் நேவிக்கேஷன்,மெட்ரியாலஜி போன்ற சில பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெறவேண்டும். இந்தப் பயிற்சி முடிந்ததும் ஸ்டூடண்ட் பைலட் லைசென்ஸ் வழங்கப்படும்.
அதையடுத்து பயிற்சியாளர்களுடன் சேர்ந்தும், தனியாகவும் 60 மணி நேரம் விமானம் ஓட்டும் பயிற்சியை முடித்தவர்கள் பிபிஎல் எனப்படும் பிரைவேட் பைலட் லைசென்ஸ் பெறலாம்.
விமானங்களில் பைலட் ஆகப் பணிபுரியவேண்டும் என்றால் சிபிஎல் எனப்படும் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் பெறவேண்டும். இதற்காக 250 மணி நேரம் விமானம் ஓட்டும் பயிற்சியைப் பெற வேண்டும். ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்துக்கு விமானம் ஓட்டுதல், இரவு நேரத்தில் விமானம் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளுடன் எழுத்துத்தேர்வும் உண்டு. இவை அனைத்திலும் தேர்ச்சி பெற்றால் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ்பெறலாம்.
இதற்கு சுமார் இரண்டு மூன்று ஆண்டு ஆகலாம். டெல்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஏவியேஷன் அமைப்புதான் இந்த கமர்ஷியல் பைலட் லைசென்சை வழங்குகிறது. ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட பைலட் பயிற்சியில் தற்போது பெண்களும் சேர்க்கப்படுகிறார்கள்.
நன்னடத்தை, பொறுப்புணர்ச்சி, காலம் தவறாமை, கடும் உழைப்பு, மனஉறுதி, விழிப்புணர்வு, சிக்கலான சூழ்நிலைகளிலும் உரிய முடிவு எடுத்து சமாளிக்கும் திறன், பல மணிநேரம் வானில் பயணம் செய்தாலும் பணியில் சலிப்பில்லாமல் இருக்கும் ஆர்வம் போன்ற திறன்களுடன் உடற்தகுதியும் கொண்டவர்கள் பைலட் பயிற்சியில் சேரலாம். பைலட் பயிற்சி பெறப் பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இந்தப் பயிற்சிக்கு ரூ.45 லட்சம் வரை செலவு ஆகலாம்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
0 Comments:
Post a Comment