மனித உயிர் உள்ள வரை மருந்து மற்றும் மருத்துவத்திற்கான தேவை இருக்க தான் செய்யும். அதனால் தான் பலர் மகத்தான மருத்துவத்துறையில் பணியாற்ற விரும்புகின்றனர். மருத்துவ துறையில் படிக்க ப்ளஸ் டூ வில் அறிவியல் படித்திருக்க வேண்டும் என்பது பலரது கருத்து. உண்மையில் அறிவியல் படிக்காத மாணவர்களுக்கும் மருத்துவ துறையில் வாய்ப்புகள் உள்ளது. எனக்கு அறிவியல் வராது என்று வேறு பாடத்தை எடுத்த மாணவர்களும் சில படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம் மருத்துவ துறைக்கு வரலாம் என்கிறார் திருவனந்தபுரம் மருத்துவ மேலாண்மை மருத்துவ கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயராஜ சேகர்.
சுகாதார பொருளாதாரம் :
ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுகாதார திட்டங்களை எப்படி மேம்படுத்துவது, அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதை பகுப்பாய்வு செய்து முடிவு செய்வதே சுகாதார பொருளாதார வல்லுநரின் பணி. ஐ.ஐ.டி, IIHMR jaipur , IIHMR Bangalore போன்ற கல்வி நிறுவனங்கள் இதற்கான பிரத்யோக படிப்பை வழங்குகிறது. சர்வதேச அமைப்புகளான WHO, unicef மற்றும் மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து சுகாதார திட்டங்கள் அனைத்திலும் சுகாதார பொருளாதார வல்லுநரின் தேவை உள்ளது.
சோசியாலஜி மற்றும் சைக்காலஜி:
பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் Bachelor of social work மற்றும் B.Sc psychology என்ற இரண்டு படிப்புகளை வழங்குகிறது. இதில் social work என்பது சமூக நலம் சார்ந்து படிப்பது, அரசின் public health பிரிவில் இதற்கான வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. இது தவிர சைக்காலஜி படிப்பதன் மூலம் மருத்துவ மனைகளில் நோயாளிகளின் மன நலனை மேம்படுத்தல், மன நல ஆலோசனை வழங்குதல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தி கொள்ள முடியும்.
மருத்துவ மேலாண்மை:
ஒரு மருத்துவ மனைக்கு தேவையான அனைத்து விசயங்களையும் செய்து கொடுத்து, மொத்த மருத்துவமனையையும் நிர்வாகம் செய்வது தான் ஒரு மருத்துவ மேலாளரின் பணி. இதற்கென தனியாக இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் உள்ளது. இதனை படிப்பதன் மூலம் மருத்துவமனை மேலாளராக மருத்துவருக்கு இனையான அதிகாரத்தையும், ஊதியத்தையும் பெற முடியும்.
மேற்சொன்ன சில பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம் மருத்துவ துறையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தன்னை ஈடுபடுத்தி கொள்ள முடியும்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment