Search

College Guidance: படித்த உடன் வேலை வேண்டுமா..? நியூட்ரிஷன் அண்ட் டயட்டீஷியன் பற்றி தெரிஞ்சுக்கோங்க...

 மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஊட்டச்சத்தான உணவு இல்லாமல் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியாது அப்படிப்பட்ட உணவும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அதிகப்படியான உணவு மனிதனுக்குப் பல பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மனித வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் உணவினை எவ்வளவு உட்கொள்ள வேண்டும், எது சத்தான உணவு? ஆரோக்கிய வாழ்விற்கு எவ்வளவு உண்ண வேண்டும் இந்தத் தெளிவினை நாம் பெற வேண்டுமானால் ஒரு ஊட்டச்சத்து நிபுணரை நாம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
இந்த ஊட்டச்சத்து நிபுணர் படிப்புக்கு 12ஆம் வகுப்பில் என்ன பிரிவு எடுத்துப் படிக்க வேண்டும், இதற்கான தகுதிகள் என்னென்ன, ஊட்டச்சத்து நிபுணர் படித்த பிறகு அரசாங்க வேலைவாய்ப்புகள் என்ன, தனியார்துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் என்ன என்பதைத் தனியார் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் நித்யா விளக்குகிறார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், “தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் அதிகம் விரும்பும் பிரிவாக ஊட்டச்சத்து நிபுணருக்கான பாடப்பிரிவு உள்ளது. அறிவியல் மற்றும் கணினி அறிவியல் பாடப் பிரிவினை எடுத்துப்படிக்கும் மாணவர்கள் அதிகம் விரும்பும் பாடமாக ஊட்டச்சத்து நிபுணர் பாடப்பிரிவு உள்ளது.


ஊட்டச்சத்து நிபுணருக்கான பாடப்பிரிவினை மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் படிப்பதால் மாணவர்களுக்கு அதிகத் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. இந்தப் பிரிவினைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவர்கள் தானும் தன்னை சார்ந்தவர்களும் வயது மற்றும் உடல் எடை ஏற்ப எவ்வளவு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றனர் மற்றும் அதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவர்கள் இந்த துறை தான் என்று அல்லாமல் பல துறைகளில் பணி புரிவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஊட்டச்சத்து நிபுணர் படிப்புடன் ஆசிரியர் படிப்பு படித்தால் ஆசிரியராகப் பணிபுரியலாம். இவர்கள் ராணுவப் பள்ளியில் கூட பணி புரிவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணி புரிவதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளது அதற்கான தகுதிகள் இருந்தால்.


இதேபோன்று வேளாண் துறைகளில் ஆராய்ச்சி பிரிவில் பல்வேறு விதைகளைப் பதப்படுத்துவது மற்றும் புதிய விதைகளைக் கண்டறிந்து ஆராய்ச்சி செய்வது மேலும் மருத்துவத்துறையில் ஊட்டச்சத்து நிபுணராக நோயாளிகளுக்கு எந்தெந்த உணவு உட்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கும் பணியினையும் மேற்கொள்ளலாம்.

மேலும் ஊட்டச்சத்து நிபுணர்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஆலோசனை வழங்குதல், அவர்களுக்கான உணவுகளை அட்டவணைப்படுத்திக் கொடுப்பது, மேலும் உடற்பயிற்சிக் கூடத்தில் உணவுக் கட்டுப்பாட்டு ஆலோசகராக என பலவிதங்களில் பணிபுரியலாம்.
இதேபோன்று அரசாங்க பணி என்று வரும்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தில் உணவு தர ஆய்வாளர் பணிக்கும் சேரலாம். இந்தப் பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தேர்வு எழுதி இந்தப் பணியில் சேரலாம்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் மற்றும் அங்கன்வாடி அலுவலர் போன்று பலஅரசுப்பணிகள் ஊட்டச்சத்து நிபுணர் பயின்றோருக்கான வேலைவாய்ப்பாக உள்ளது என அவர் தெரிவித்தார்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

0 Comments:

Post a Comment