மத்தியக் கல்வி அமைச்சகம் நிர்வகிக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான ப்ரீகேஜி, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது.
அடிக்கடி பணிமாறுதல்களுக்கு உள்ளாகும் மத்திய அரசு பணியாளர்களின் குழந்தைகளுக்கு நாடு முழுவதும் பொதுவான கல்வியை உறுதி செய்யும் வகையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ ) பாடமுறையும் பயிற்றுவித்தல் திட்டமும் பின்பற்றப்படுகிறது.
கேந்திரிய வித்யாலயா கல்வி நிலையங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டும் பயிற்று மொழியாக உள்ளன. இருப்பினும், கூடுதல் முயற்சியாக, 20 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் விரும்பி கேட்டுக் கொண்டால், உள்ளூர் தாய் மொழி பயிற்றுவிக்கப்படும்.
நிதி ஒதுக்கீடு, தரமான ஆசிரியர்கள் நியமனம், நிர்வாகக் கட்டமைப்புகள் ஆகியவற்றின் காரணமாக இந்தப் பள்ளிகளில் தரமான பயிற்றுவித்தல் இருப்பதாக நம்பப்படுகிறது. உதாரணமாக, சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் கேந்திர வித்யாலயா பள்ளிகள் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகின்றன. எனவே, நீங்கள் உங்கள் குழந்தையை இந்த பள்ளிகளில் சேர்க்க விரும்பினால் உடனடியாக இதற்கு விண்ணப்பியுங்கள்.
ப்ரீ கேஜி, எல் கேஜி, யூ கேஜி சேர்க்கைக்கான வயது வரம்பு:
இந்நிலையில், 2024-25ம் கல்வியாண்டிற்கான ப்ரீ கேஜி (balvatika - 1), எல் கேஜி (balvatika - 2), யூ கேஜி (balvatika - 3) வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
ப்ரீ கேஜி வகுப்புக்கு 31/03/2024 அன்று விண்ணப்பதாரர் 3 வயதைக் கடந்தும், 4 வயதை பூர்த்தி செய்யாமலும் இருத்தல் வேண்டும். எல்கேஜி (balvatika - 2) வகுப்புக்கு மாணவர் 31/03/2024 அன்று விண்ணப்பதாரர் 4 வயதைக் கடந்தும், 5 வயதை பூர்த்தி அடையாதகவராகவும் இருத்தல் வேண்டும். யூ கேஜி (balvatika - 3) வகுப்புக்கு 31/03/2024 அன்று விண்ணப்பதாரர் 5 வயதைக் கடந்தும், 6 வயதை பூர்த்தி செய்யாமலும் இருத்தல் வேண்டும்
சேர்க்கையில் யாருக்கு முன்னுரிமை: அரசுப் பணிகளில் இல்லதாவர்களும் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தாலும், தனியார் நிறுவனத்தில் பணி செய்பவராக இருந்தாலும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
இருப்பினும், பணிமாறுதல்களுக்கு உள்ளாகும் மத்திய அரசு பணியாளர்களின் குழந்தைகளுக்கான இந்த பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதால், இவ்வகை விண்ணப்பதாரர்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்கப்படும்.
அதன்படி, பணிமாறுதல்களுக்கு உள்ளாகும்/ பணிமாறுதல்களுக்கு உள்ளாகாத மத்திய அரசுப் பணியாளர்கள், பணிமாறுதல்களுக்கு உள்ளாகும்/ பணிமாறுதல்களுக்கு உள்ளாகாத மத்திய பொதுத் துறை நிறுவன பணியாளர்கள், பணிமாறுதல்களுக்கு உள்ளாகும்/ பணிமாறுதல்களுக்கு உள்ளாகாத மாநில அரசு பணியாளர்கள், பணிமாறுதல்களுக்கு உள்ளாகும்/ பணிமாறுதல்களுக்கு உள்ளாகாத மாநில பொதுத் துறை ஊழியர்கள், மற்ற பிரிவைச் சார்ந்த குழந்தைகள் என்ற முன்னுரிமை அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படுகிறது.
பால்வதிகா மாணவர் சேர்க்கை அந்தந்த பள்ளிகளில் நடைபெறும். இதற்கு ஆன்லைன் முறை விண்ணப்பங்கள் கிடையாது. https://kvsangathan.nic.in/admission/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உங்கள் அருகில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பால்விதியா சேர்க்கை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
0 Comments:
Post a Comment