பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், மூன்றாம் பாலினத்தவர்கள், ஆதரவற்றவர்கள் இலவசக் கல்வித் திட்டத்தில் இணைந்து இளநிலை பட்டப்படிப்பு படிப்பதற்கான அறிவிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.
1.இலவசக் கல்வித்திட்டத்தின் கீழ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் மாணவர்கள் 2023 - 2024 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
2.மாணவர்கள் முதல் முயற்சியிலேயே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
3.வருவாய்த் துறை வட்டாட்சியர் (Tahsildar) வழங்கிய வருமானச் சான்றிதழின்படி, மாணவரின் குடும்பத்தின ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்கவேண்டும்.
4.ஒவ்வொரு கல்லூரிக்கும் குறைந்தபட்சம் 3 இலவச இருக்கைகள் ஒதுக்கப்படும் (அதாவது ஒவ்வொரு பிரிவின் கீழும் 1 இலவச இருக்கை). இவை பல்கலைக்கழகத்தால் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கைக்கு மேலே கூடுதல் இடங்களாக அனுமதிக்கப்படும்.
பிரிவு 1: மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் (1/3rd of seats) பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற மாணவர்கள் முக்கிய பாடங்களில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும்.
பிரிவு 2: மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் (1/3rd of seats) முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் திருநங்கைகள் முக்கிய பாடங்களில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும்.
பிரிவு 3: மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் (1/3rd of seats) முக்கிய பாடங்களில் 80% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குத் தகுதி (MERIT) அடிப்படையில் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 1:2 என்ற விகிதத்தில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
5. விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சமீபத்திய வருமானச் சான்றிதழ் (ஒரு வருடத்திற்குள் வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும்) ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பிரிவு-1 மற்றும் பிரிவு-2 சேர்ந்த மாணவர்கள் முதல் பட்டதாரி சான்றிதழ் வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும் (பொருத்தினால்). மாற்றுத்திறனாளி சான்றிதழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடமிருந்து பெற்றிருக்க வேண்டும் (பொருத்தினால்), இறப்பு சான்றிதழ் (பொருந்தினால்). மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் பதிவேற்றம் செய்யத் தவறினால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
[வருமானச் சான்றிதழ் அல்லது முதல் பட்டதாரி சான்றிதழ் கிடைக்கத் தாமதமானால் வட்டாட்சியரிடமிருந்து பெற்ற ஒப்புதல் சீட்டைப் பதிவேற்றம் செய்யலாம், சான்றிதழைக் கலந்தாய்வுக்கு வரும்பொழுது சமர்ப்பிக்கவும்.]
6. இலவசக் கல்வித் திட்ட விண்ணப்பத்தையும் அதில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் https://www.unom.ac.in என்ற சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
0 Comments:
Post a Comment