12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என சிந்திக்கும் போது உறவுகள் வட்டத்திலிருந்தும் அக்கம் பக்கத்திலிருந்தும் ஆயிரம் பேர் பொறியியல், மருத்துவம் என சில பரிந்துரைகளை அளித்திருப்பார்கள். அந்த பரிந்துரைகளால் மனம் சோர்ந்த மாணவர்கள் தினசரி ஒரே மாதிரியான வேலை செய்யும் துறையைத் தவிர்த்து புதிதாக வேலை செய்யக் கூடிய துறையைத் தேடுவார்கள்.
அப்படி அவர்களது தேடலுக்குத் தீர்வாகக் கிடைக்கக் கூடியது தான் திரைத்துறை. திரைப்படத் தொழில்நுட்பம் பயின்றவர்களுக்குத் திரைத்துறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றது. தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக்கல்லூரி மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் திரைப்படத் தொழில்நுட்பம் பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த கல்லூரியில் திரைப்படத் தொழில்நுட்பம் சம்பந்தமாக 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகளை (visual arts) படிக்கலாம். இந்த 4 ஆண்டு பட்டப்படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கும். ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் (அனிமேஷன் அண்ட் விஷுவல் எபெக்ட்ஸ்), எண்மிய இடைநிலை (டிஜிட்டல் இன்டர்மீடியட்) ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டப்படிப்புகள் உள்ளன.
ஒளிப்பதிவு (சினிமாட்டோகிராபி), எண்மிய இடைநிலை (டிஜிட்டல் இன்டர்மீடியட்) ஆகிய படிப்புகளில் சேர விரும்புவோர் 12ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடங்களை முக்கிய பாடங்களாக எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிறப்புப் பாடமாகப் புகைப்படம் சார்ந்த தொழிற்படிப்புகள் அல்லது அதற்கு இணையான படிப்புகள் அல்லது எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினியரிங் டிப்ளமோ படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களும் இப்படிப்புகளில் சேரலாம்.
ஒலிப்பதிவு (ஆடியோகிராபி) பட்டப்படிப்பில் சேர விரும்புவோர், 12ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும். சிறப்புப் பாடமாக வானொலி அல்லது தொலைக்காட்சி அல்லது உள்நாட்டு மின்னணு உபகரணங்கள் சார்ந்த தொழில் படிப்புகள் அல்லது அதற்கு இணையான படிப்புகள் அல்லது எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் டிப்ளமோ படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் இப்படிப்பில் சேரலாம்.
12ஆம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்திருந்தாலும் படத்தொகுப்பு (எடிட்டிங்), உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் (அனிமேஷன் அண்ட் விஷுவல் எபெக்ட்ஸ்) ஆகிய படிப்புகளில் சேரலாம்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
Click here to join WhatsApp group for Daily employment news
Click here for latest employment news
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
0 Comments:
Post a Comment