IB புலனாய்வு பணியகத்தில் வேலைவாய்ப்பு – 660 காலியிடங்கள்!!
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புலனாய்வு பணியகத்தில் (Intelligence Bureau) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ACIO, PA, JIO, SA மற்றும் பல பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
IB புலனாய்வு பணியகத்தில் வேலை:
ACIO, PA, JIO, SA பதவிகளுக்கு 660 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
12.05.2024 தேதிப்படி பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
MHA IB கல்வித்தகுதி :
Engineering / Class 10th/ Diploma/ Graduate தேர்ச்சி
Officers of the Central Police Organizations or State Police Organizations or Defence forcesல் இருக்க வேண்டும்.
புலனாய்வு பணியக ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் Interview மற்றும் Written Test இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 12.05.2024 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
MHA IB Recruitment 2024 – PDF Download
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment