10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டது. அனைவரும் உயர்கல்வியில் என்ன படிக்கலாம்? என்ன படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும்? என்ன படித்தால் அரசு வேலை பெற முடியும் போன்ற பல கேள்விகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.
அப்படிப் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு தரக்கூடியது தான் நர்சிங் படிப்பு. இதை 12ஆம் வகுப்பு படித்தவர்கள் பட்டப்படிப்பாகவும், 10ஆம் வகுப்பு படித்தவர்கள் டிப்ளமோ படிப்பாகவும் படிக்க முடியும். நர்சிங் படித்தவர்கள் மருத்துவமனைகள், கிளினிக்குளில் செவிலியராகப் பணியாற்ற முடியும். மேலும் நர்சிங் படித்தவர்களுக்கு வெளிநாட்டிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
பிஎஸ்சி நர்சிங் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல்) பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும். இப்படிப்பை அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் படிக்கலாம்.
அரசு செவிலியர் பள்ளிகளில் நர்சிங் டிப்ளமோ படிப்பில் 12ஆம் வகுப்பு படித்த மாணவிகள் மட்டும் சேர்க்கப்படுகிறார்கள். மாணவிகள் தமிழ் மொழியை முதல் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டியதும் அவசியம்.
நர்சிங் டிப்ளமோ படித்தாலும் சரி, நர்சிங் பட்டப்படிப்பு படித்தாலும் சரி நர்சாகப் பணிபுரிவதற்குத் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டியது அவசியம். பிஎஸ்சி நர்சிங் படிப்புக் காலம் 4 ஆண்டுகள். நர்சிங் டிப்ளமோ படிப்பு மூன்றரை ஆண்டுகளாக இருந்தது. 2016 கல்வியாண்டிலிருந்து இருந்து நர்சிங் டிப்ளமோ படிப்புக்காலம் 6 மாதங்கள் குறைக்கப்பட்டு, 3 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.
நர்சிங் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புக்கான பாடங்களில் அதிக வித்தியாசம் இல்லை. ஊதிய விகிதத்தில் நர்சிங் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்குச் சற்றுக் கூடுதலான ஊதியம் கிடைக்கும். நர்சிங் படித்தவர்களுக்கு நமது நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் நல்ல வேலைவாய்ப்பு கிடைத்து விடுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் நர்சிங் அசிஸ்டென்ட் படிப்பில் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். இந்த ஓராண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் மருத்துவமனைகளில் வேலை கிடைக்கும்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment