10.05.2024 அன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 13.05.2024 முற்பகல் 11.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து அனைத்து மேல்நிலை / உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட USER ID , PASSWORD- ஐக் கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உரிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ( Provisional Certificate ) பதிவிறக்கம் செய்து , அச்சான்றிதழ்களில் விவரங்களைச் சரிபார்த்து , தலைமையாசிரியரின் உள்ள கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டுத் 13.05.2024 அன்று முதலே மாணவர்களுக்கு வழங்கலாம் அல்லது மாணவர்கள் தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். .
தனித்தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் , உரிய மதிப்பெண் பட்டியலை ( Statement of Marks ) தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
DGE - SSLC Proceedings👇
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment