June 2024 - Agri Info

Adding Green to your Life

June 30, 2024

4 & 5th Std | Formative Assessment FA ( b ) - Term 1 Time Table ( 2024-2025 )

June 30, 2024 0
4 & 5th Std | Formative Assessment FA ( b ) - Term 1 Time Table ( 2024-2025 )

 



FA ( b ) | 4 & &ஆம் வகுப்பு - வளரறி மதிப்பீட்டிற்கான  கால அட்டவணை - 2024-2025 

 பருவம் 1 FORMATIVE ASSESSMENT ( b ) - FA ( b ) - Classes 4 & 5

1 - 3rd Std | Formative Assessment FA ( b ) - Term 1 Time Table ( 2024-2025 )

June 30, 2024 0
1 - 3rd Std | Formative Assessment FA ( b ) - Term 1 Time Table ( 2024-2025 )

 FA ( b ) | 1 - 3ஆம் வகுப்பு - வளரறி மதிப்பீட்டிற்கான  கால அட்டவணை - 2024-2025 

 பருவம் 1 FORMATIVE ASSESSMENT ( b ) - FA ( b ) - Classes 1-3

IMG-20240630-WA0009_wm



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

கலை, அறிவியல் கல்லூரிகளில் இனி ஒரே நேரத்தில் பருவத் தேர்வுகள்: முதல்முறையாக வருடாந்திர அட்டவணை வெளியீடு

June 30, 2024 0
 கலை, அறிவியல் கல்லூரிகளில் இனி ஒரே நேரத்தில் பருவத் தேர்வுகள்: முதல்முறையாக வருடாந்திர அட்டவணை வெளியீடு

 1272300

தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான கல்வியாண்டு கால அட்டவணையை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே காலத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.


இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம், அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு, அரசு உதவி, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் வெவ்வேறு விதமான வேலைநாட்கள், பருவத்தேர்வு, விடுமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனால் கல்லூரிகளின் முறையான கல்விச் சூழல் பாதிக்கப்படுகிறது.


பருவத்தேர்வு முடிவுகளும் தாமதமாக வெளியிடப்படுகின்றன. இதன் காரணமாக முதுநிலை படிப்புக்கான சேர்க்கையில் விரைந்து சேர முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். இதுதவிர உயர்கல்விக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் உரிய காலத்துக்குள் மாணவர்கள் செல்ல முடியாத நெருக்கடியும் உருவாகிறது. இதை பெரிய கால இடைவெளிகள் இல்லாத பொதுவான வரைவு கால அட்டவணை தேவைப்படுகிறது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் பின்பற்றும் வகையில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான வரைவு கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன.


ஒற்றை (1, 3, 5) பருவங்களில் பயிலும் மாணவர்களுக்கான அகமதிப்பீடு தேர்வுகள் செப்டம்பர் மாதத்திலும், செய்முறைத் தேர்வுகள் அக்டோபர் 9 முதல் 17-ம் தேதி வரையும், மாதிரித் தேர்வுகள் அக்டோபர் 18 முதல் 28-ம் தேதி வரையும் நடைபெறும். பருவத் தேர்வுகள் அக்டோபர் 31-ல் தொடங்கி நவம்பர் 25-ம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் 16-ம் தேதிக்குள் வெளியாகும்.

இதேபோல், இரட்டை பருவங்களுக்கான (2, 4, 6) வகுப்புகள் டிசம்பர் 4 முதல் 2025 ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெறும். மேலும், செய்முறைத் தேர்வுகள் மார்ச் 24 முதல் 28-ம் தேதி வரை நடத்தப்படும். இதுதவிர பருவத் தேர்வுகள் ஏப்ரல் 15 முதல் மே 10-ம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 31-ம் தேதிக்குள் வெளியாகும். எனவே, பல்கலைக்கழக தேர்வுத் துறைகளும், கல்லூரி நிர்வாகங்களும் மாணவர் நலன்கருதி, இந்த வருடாந்திர கால அட்டவணையை பின்பற்றி செயல்பட வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மாநில கல்விக்கொள்கை ஆய்வு அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு - முக்கிய அம்சங்கள் :

June 30, 2024 0
மாநில கல்விக்கொள்கை ஆய்வு அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு - முக்கிய அம்சங்கள் :

 

IMG_20240701_114614

மாநில கல்விக்கொள்கை ஆய்வு அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

முக்கிய அம்சங்கள் :👇👇👇



* 3 , 5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக , மாநில கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்தார் . இக்குழு பொதுமக்களிடம் கருத்து பெற்று விரிவான அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது . அதில் , 3 , 5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என்றும் , தமிழ் , ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைபிடிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.



* நீட் தேர்வு வேண்டாம் - மாநில கல்விக்கொள்கை ஆய்வறிக்கை 


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஜூலை 3 முதல் 5-ம் தேதி வரை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம்

June 30, 2024 0
ஜூலை 3 முதல் 5-ம் தேதி வரை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம்

 1272541

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளவும், விடுபட்ட சான்றிதழை இணைக்கவும் ஜூலை 3 முதல் 5-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் - பராமரிப்பு படிப்பு (பிவிஎஸ்சி - ஏஹெச்) உள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு - பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் உணவுதொழில்நுட்பம் (பி.டெக்), பால்வளதொழில்நுட்பம் (பி.டெக்) மற்றும்ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி - மேலாண்மை கல்லூரியில் கோழியின தொழில்நுட்பம் (பி.டெக்) ஆகிய பட்டப்படிப்புகள் உள்ளன. இவை 4 ஆண்டுகால படிப்பாகும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இதற்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.


இப்படிப்புகளில் 2024-25 கல்விஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன்3-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி கடந்த 28-ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. பிவிஎஸ்சி - ஏஹெச் படிப்புக்கு 14,497 பேர், பிடெக் படிப்புகளுக்கு 3,000 பேர் என மொத்தம் 17,497 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


இந்நிலையில், மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, தவறு செய்திருந்தால், அதற்கான திருத்தங்களை மேற்கொள்ளவும், விடுபட்ட சான்றிதழை இணைக்கவும் ஜூலை 3 முதல் 5-ம் தேதி வரை 3 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. பின்னர், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஜூலை இறுதியில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Palli kalvi - பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் மாற்றம்!

June 30, 2024 0
Palli kalvi - பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் மாற்றம்!

 dinamani%2F2024-06%2F5982c971-15d4-4bea-aa21-607408402581%2Fsecretairiat_tamil_nadu

தொடக்கக் கல்வி இயக்குநராக இருந்த கண்ணப்பன் பள்ளிக் கல்வி இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக இருந்த அறிவொளி இன்று ஓய்வு பெற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதேபோன்று அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா, தொடக்கக் கல்வி இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி இயக்குனர் லலிதாவுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்குநர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


இது குறித்த அரசாணையை பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ளார். இந்த பணி மாறுதல் ஆணை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1c1715ae-7ef7-4dc3-a797-36eba44aa4e1

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு- I ஐ சார்ந்த இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி, இந்த பணியிட மாறுதல் மற்றும் முழு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

CPS Account Slip 2024 - Download Now

June 30, 2024 0
CPS Account Slip 2024 - Download Now

 CPS ACCOUNT SLIP தற்போது வெளியாகி உள்ளது.

CPS

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி புரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது . அத்துறையின் " cps.tn.gov.in/public " என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்👇👇👇
Click Here to Download - CPS Account Slip - Pdf


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இன்ஜினியரிங் கவுன்சலிங் சுற்றுகளில் மாற்றம்? மாணவர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

June 30, 2024 0
இன்ஜினியரிங் கவுன்சலிங் சுற்றுகளில் மாற்றம்? மாணவர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

 தமிழகத்தில் பொறியியல் கவுன்சலிங்கிற்கான செயல்முறை தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு கவுன்சலிங் சுற்றுகளில் மாற்றம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை செயல்முறையை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிக்க 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், இந்த ஆண்டு பொறியியல் கவுன்சலிங் செயல்முறையில் மாற்றம் இருக்கும் என்று கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த ஆண்டு பொறியியல் கவுன்சலிங் 4 சுற்றுகளாக நடைபெறாது. அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஒரேச் சுற்றாக நடைபெற உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனவே மாணவர்கள் அதற்கேற்றாற்போல் தயாராக வேண்டும். தங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரி கிடைக்கும் என கவனித்து சாய்ஸ் ஃபில்லிங் செய்ய வேண்டும். ரேங்க், கடந்த ஆண்டு நிலவரம், கட் ஆஃப் வித்தியாசம், எத்தனை கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பன போன்றவற்றை எல்லாம் கவனித்து சாய்ஸ் பில்லிங் செய்ய வேண்டும்.  

 



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

அரசு போக்குவரத்து கழக வேலை வாய்ப்பு; 688 பணியிடங்கள்; டிகிரி, டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

June 30, 2024 0
அரசு போக்குவரத்து கழக வேலை வாய்ப்பு; 688 பணியிடங்கள்; டிகிரி, டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை, கும்பகோணம் மற்றும் எம்.டி.சி சென்னை ஆகிய மண்டலங்களில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 668 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2024

பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate (Engineering) Apprentices)

காலியிடங்களின் எண்ணிக்கை: 85

TNSTC – Madurai:  20

TNSTC – Kumbakonam: 35

MTC, Chennai – 30

கல்வித் தகுதி : Mechanical Engineering / Automobile Engineering/ Civil Engineering/ Electrical and Electronics Engineering படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 9,000

பட்டயப் பயிற்சி (Technician (Diploma) Apprentices)

காலியிடங்களின் எண்ணிக்கை : 303

TNSTC – Madurai:  51

TNSTC – Kumbakonam: 62

MTC, Chennai – 190

கல்வித் தகுதி : Mechanical Engineering / Automobile Engineering/ Civil Engineering/ Electrical and Electronics Engineering டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 8,000

பட்டதாரி பயிற்சி (Graduate Apprentices)

காலியிடங்களின் எண்ணிக்கை: 300 (TNSTC – Kumbakonam)

கல்வித் தகுதி : B.A. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 9,000

பயிற்சி கால அளவு : 1 வருடம்

தேர்வு செய்யப்படும் முறைடிகிரி, டிப்ளமோ அல்லது பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டிற்கு பயிற்சி அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறைஇந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட மண்டலங்களின் பெயர்களை தெரிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com/ என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news