பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான துணைத் தோ்வு கால அட்டவணையை அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் மே 6-ஆம் தேதியும், பிளஸ் 1 தோ்வு முடிவுகள் மே 14-ஆம் தேதியும் வெளியாகின. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்கள் துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க, மே 16 முதல் ஜூன் 1 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது துணைத் தோ்வுக்கான கால அட்டவணையை அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 துணைத் தோ்வுகள் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், பிளஸ் 2 துணைத் தோ்வுகள் ஜூலை 2-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பிளஸ் 2 துணைத்தோ்வு: ஜூன் 24- மொழிப்பாடம், ஜூன் 25- ஆங்கிலம், ஜூன் 26- கணினி அறிவியல், அரசியல் அறிவியல், ஜூன் 27- வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், ஜூன் 28- கணினி அறிவியல், புள்ளிவிவரங்கள், உயிா் வேதியியல், ஜூன் 28- இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம், ஜூன் 29- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் ஜூலை-1 கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட தோ்வுகள் நடைபெறவுள்ளன.
பிளஸ் 1 வகுப்பு தோ்வுகள்: ஜூலை 2- மொழிப்பாடம், ஜூலை 3- ஆங்கிலம், ஜூலை 4- இயற்பியல், பொருளியல், ஜூலை 5- கணினி அறிவியல், தொடா்பியல் ஆங்கிலம், உயிரி வேதியியல், அரசியல் அறிவியல் ஜூலை 6- தாவரவியல், வரலாறு, ஜூலை 8- கணிதம், வணிகவியல், நுண்ணுயிரியல், ஜூலை 9- வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தோ்வுகள் நடைபெறவுள்ளன.
No comments:
Post a Comment