உடற்பயிற்சி செய்வது உடலுக்கும், மனதுக்கும் பல விதங்களில் நன்மை அளிக்கிறது. மேலும் உடற்பயிற்சி செய்யாதவர்களை விட தினந்தோறும் உடற்பயிற்சி செய்பவர்கள் இளமையாக தோற்றமளிப்பதாகவும் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக மக்கள் தொகையில் 30%க்கும் அதிகமானோர் ஆரோக்கியமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்த பரிந்துரைக்கப்பட்ட அளவுகளின்படி, மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதில்லை என்று கூறியுள்ளது.
40% க்கும் அதிகமான இந்தியர்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதில்லை என்றும் இதன் காரணமாக உயிருக்கு ஆபத்தான நோய்களின் ஆபத்தில் உள்ளனர் என்றும் லான்செட் ஆய்வு கண்டறிந்துள்ளது. WHO கூற்றின் படி, ஒவ்வொரு வாரமும் 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும், அது முடியாதபட்சத்தில் குறைந்தது 75 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என கூறியிருந்தது.
போதுமான உடற்பயிற்சி இல்லாததால் 2000 ஆம் ஆண்டில் 23.4% ஆகவும், 2010 ஆம் ஆண்டில் 26.4% ஆகவும் இருந்த உலகளாவிய பாதிப்பு, 2022 ஆம் ஆண்டில் 31.3% ஆக அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இது பெண்களிடையேயான பாதிப்பு 5 சதவீதம் ஆக அதிகத்திருந்தது. இந்நிலையில் உலக சுகாதார சபை (WHA) 2010 ஆம் ஆண்டிலிருந்து 2030 ஆம் ஆண்டுக்குள் போதுமான உடற்பயிற்சி இல்லாத சதவீதத்தை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2010 ஆம் ஆண்டிலிருந்து 2030 ஆம் ஆண்டுக்குள் 15% ஆக குறைக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.
போதுமான உடற்பயிற்சிகள் இல்லாததற்கு கோவிட் லாக்டவுன் காரணமா?
கோவிட்-19 லாக்டவுன்கள் போதுமான உடற்பயிற்சிகள் இல்லாததற்கு வழிவகுத்தது, மேலும், பொது சுகாதாரத்தை மோசமாக பாதித்தது. கோவிட் கட்டுப்பாடுகளானது, மக்களை தங்கள் வீடுகளுக்குள் அடைத்து வைத்தது மட்டுமல்லாமல், வழக்கமான உடற்பயிற்சிக்கான வாய்ப்புகளையும் குறைந்துவிட்டன, அதாவது, ஜிம்கள், ஸ்விம்மிங் பூல் ஆகியவை மூடப்பட்டன, மேலும், ஜாக்கிங், வாக்கிங் போன்ற வழக்கமான நடைபயிற்சிகளை சீர்குலைத்தது. லாக்டவுனால் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றம் நாள் முழுவதும் உட்கார்ந்து வேலைபார்க்கும் வாழ்க்கை முறைக்கு, பல தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
போதுமான உடற்பயிற்சிகள் இல்லாதது நாள்பட்ட நோய்கள் உட்பட பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்க தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். ஜாக்கிங், வாக்கிங் , சைக்கிள் ஓட்டுதல் அல்லது விருப்பமான விளையாட்டில் ஈடுபடுதல் போன்ற எளிய செயல்பாடுகள், உட்கார்ந்து வேலைபார்க்கும் வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய அபாயங்களைக் கணிசமாகக் குறைத்து, நீண்ட, ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.
போதுமான உடற்பயிற்சி செய்யாதது இதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே வழக்கமான உடற்பயிற்சி செய்வதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல், இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைப்பது போன்ற ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவுகிறது.
போதுமான உடற்பயிற்சி இல்லாதது, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. மேலும், இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுத்து, இதய செயலிழப்பை ஏற்படுத்தும்.
பெண்களும் வழக்கமான உடற்பயிற்சிகளில் குறிப்பிடத்தக்க வகையில் பயனடைகிறார்கள். வழக்கமான உடற்பயிற்சிகள் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது பெண்களுக்கு முக்கியமானது. மாதவிடாய் சுழற்சிகள், கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காலத்தில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் இயற்கையாகவே நிகழ்கின்றன. எனவே வழக்கமான உடற்பயிற்சியானது ஹார்மோன்களை உறுதிப்படுத்த உதவுகிறது, இதுமட்டுமல்லாமல், மனநிலை மாற்றங்கள், சோர்வு மற்றும் எரிச்சல் போன்ற அறிகுறிகளையும் குறைக்கிறது.
0 Comments:
Post a Comment