Chennai Petroleum Corporation Limited (CPCL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
CPCL காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Officer பணிக்கென மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Officer கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc, MA, MBA, MBBS, PG Diploma, ACS/ICSI என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CPCL வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Officer ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CPCL தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.11.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment