சென்னையில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஆண், பெண்களுக்கு பேக்கரி பொருட்கள் தயாரிப்பதற்கான 3 நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் நிலையில் எப்படி விண்ணப்பித்து பயிற்சியில் இணைவது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
மத்திய, மாநில அரசு சார்பில் ஆண், பெண் என்று இருதரப்பினரையும் தொழில் முனைவோராக்கும் நோக்கில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மாநில அரசு சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் பல்வேறு தொழில் சார்ந்த வழிக்காட்டுதல்கள், பயிற்சிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தான் ஆண், பெண்கள் என இருவருக்கும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பதற்கான 3 நாள் பயிற்சி தற்போது அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்க உள்ளது. இந்த பயிற்சி என்பது 26.06.2024 முதல் 28.06.2024 வரை 3 நாட்கள் தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களின் மூலப்பொருள், பிராண்ட் போன்றவற்றால் கிடைக்கும் தன்மை, கருவிகள் மற்றும் உபகரணங்கள், இயந்திரங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்படும். மேலும் ஹைதராபாத் கராச்சி பிஸ்கட், ஜெர்ரா உப்பு பிஸ்கட், இனிப்பு குக்கீகள், ஈஸ்ட் புளிக்க வைக்கப்பட்ட பாம்பே பன், இனிப்பு ரொட்டி, கிரீம் பன், பழ ரஸ்க், பப்ஸ் வகைகள், கேக் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள்.
மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்கான விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் பற்றியும் விளக்கப்படும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதியான 10ம் வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றி கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032 என்ற முகவரியை அணுகலாம். இல்லாவிட்டால் 86681 02600, 70101 43022 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment