தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான அரசு வேலை – சம்பளம்: ரூ.36,800/- || முழு விவரங்களுடன்!
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் மெய்காவலர் பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TNHRCE காலிப்பணியிடங்கள்:
மெய்காவலர் பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெய்காவலர் கல்வி தகுதி:
தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
TNHRCE வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்
மெய்காவலர் ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.11,600/- முதல் ரூ.36,800/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
No comments:
Post a Comment