நாம் சொல்கிறபடி உடல் இயங்காது. திடீரென பல வித்தியாசமான வழிகளில் நடந்து கொள்ளும். ஆனால் எல்லா அடிவயிற்று அறிகுறிகளும் புற்றுநோயின் ஆபத்தை குறிக்குமா..? இது இரைப்பை புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. வயிற்றுடைய செல் பிரிவு கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகாமல் போகலாம்.
வயிற்றுப் புற்றுநோய் எங்கு வேண்டுமானாலும் வரலாம் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். சில சமயங்களில் தும்மல் மற்றும் இருமலின் போது கூட ரத்தம் வெளியேறும். இதுபோன்ற சமயங்களில் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்.
இரைப்பை உணவுக்குழாய் இணையும் பகுதியில் தான் வயிற்றுப் புற்றுநோய் ஆரம்பமாகிறது. இது எளிமையாக உணவுக்குழாய் என அழைக்கப்படுகிறது. குழல் வடிவத்தில் இருக்கும் இதன் வழியாகவே நாம் சாப்பிடும் உணவுகள் செல்கிறது. இந்த குழாய் வழியாக உணவுகள் இரைப்பையை சென்றடைகின்றன. இது உணவுக்குழாய் என்று அழைக்கப்படுகிறது. வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் சில நேரங்களில் வெளிப்படையாக தெரிவதில்லை.
குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே புற்றுநோயின் அறிகுறிகளை உடல் வெளிப்படுத்த தொடங்குகிறது. ஆனால் நாம்தான் அதை கண்டுகொள்வதில்லை. இதுகுறித்த விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.
வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் என்னவென்று இப்போது பார்ப்போம் வாருங்கள்.
வாந்தி எடுக்கும் போது ரத்தம் கலந்து வந்தால், எக்காரணம் கொண்டும் அதை புறக்கணிக்காதீர்கள். சில சமயங்களில் தும்மல் மற்றும் இருமலின் போது கூட இரத்தம் வெளியேறும். இதுபோன்ற சமயங்களில் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்.
வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் சாப்பிடும் உணவு ஒழுங்காக செரிமானமாகவில்லை என்று தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அப்போதுதான் கடினமான சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட அதை எளிதாக சமாளிக்க முடியும்.
தொண்டை புண்ணும் வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. ஆகையால் எந்தச் சூழ்நிலையிலும் இதை புறக்கணிக்காதீர்கள். நிலைமை மோசமாகும் முன் உடனே மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.
வயிற்றில் புற்றுநோய் இருந்தால், மலம் கருப்பு நிறத்தில் வெளியேறும். ஆகையால் மலத்தின் நிறத்தில் எப்போதாவது மாற்றம் ஏற்பட்டால், காலம் தாழ்த்தாமல் உடனடியாக அதை சரிசெய்யும் முயற்சியை எடுங்கள்.
வயிற்றுப் புற்றுநோய் அல்லது வேறு இடங்களில் புற்றுநோய் இருந்தாலோ முதலில் உடல் எடை குறையத் தொடங்கும். தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி உங்கள் சந்தேங்கங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் உடலை முழுமையாக பரிசோதித்து பார்த்த பிறகே சரியான நிலவரத்தை கண்டறிய முடியும். புற்றுநோய் தொடர்பாக ஏதாவது அறிகுறிகள் இருந்தால் நீங்களாக எதையும் முடிவு செய்யாமல் தகுந்த மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே முடிவெடுக்க வேண்டும்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment