அரசு போக்குவரத்து கழக வேலை வாய்ப்பு; 688 பணியிடங்கள்; டிகிரி, டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிங்க! - Agri Info

Adding Green to your Life

June 30, 2024

அரசு போக்குவரத்து கழக வேலை வாய்ப்பு; 688 பணியிடங்கள்; டிகிரி, டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை, கும்பகோணம் மற்றும் எம்.டி.சி சென்னை ஆகிய மண்டலங்களில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 668 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2024

பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate (Engineering) Apprentices)

காலியிடங்களின் எண்ணிக்கை: 85

TNSTC – Madurai:  20

TNSTC – Kumbakonam: 35

MTC, Chennai – 30

கல்வித் தகுதி : Mechanical Engineering / Automobile Engineering/ Civil Engineering/ Electrical and Electronics Engineering படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 9,000

பட்டயப் பயிற்சி (Technician (Diploma) Apprentices)

காலியிடங்களின் எண்ணிக்கை : 303

TNSTC – Madurai:  51

TNSTC – Kumbakonam: 62

MTC, Chennai – 190

கல்வித் தகுதி : Mechanical Engineering / Automobile Engineering/ Civil Engineering/ Electrical and Electronics Engineering டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 8,000

பட்டதாரி பயிற்சி (Graduate Apprentices)

காலியிடங்களின் எண்ணிக்கை: 300 (TNSTC – Kumbakonam)

கல்வித் தகுதி : B.A. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 9,000

பயிற்சி கால அளவு : 1 வருடம்

தேர்வு செய்யப்படும் முறைடிகிரி, டிப்ளமோ அல்லது பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டிற்கு பயிற்சி அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறைஇந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட மண்டலங்களின் பெயர்களை தெரிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com/ என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment