BEL நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Engineer-I பணிக்கென காலியாக உள்ள 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
BEL காலிப்பணியிடங்கள்:
BEL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Project Engineer-I பணிக்கென மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Project Engineer கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அனுமதி பெற்று இயங்கும் பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.
BEL வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Engineer ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 1st Year – Rs. 40,000/-
- 2nd Year – Rs. 45,000/-
- 3rd Year – Rs. 50,000/-
- 4th Year – Rs. 55,000/-
BEL தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment