வரலாறு படித்தால் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளது தெரியுமா ? - Agri Info

Adding Green to your Life

June 2, 2024

வரலாறு படித்தால் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளது தெரியுமா ?

 வரலாற்றில் இளங்கலை என்பது மூன்று வருட இளங்கலை பாடத் திட்டமாகும். மேலும் வரலாற்றில் முதுகலை என்பது இரண்டு வருட முதுகலை பாடத்திட்டமாகும். இந்த பாடநெறி வரலாற்றின் பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், அரசியல் மற்றும் கருத்தியல் அம்சங்களைக் கையாள்வதால், மாணவர்கள் கருத்துக்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இதில் BA. History அதாவது வரலாறு படித்தால் என்ன பயன் என்பது பற்றியும், அதில் உள்ள சிறப்புகள் பற்றியும் விழுப்புரம் மாவட்ட அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்வரலாறு பேராசிரியர் முனைவர் ரமேஷ், வரலாறு பாடப்பிரிவை எடுத்து படித்தால் என்ன பயன்கள் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “BA. History அதாவது வரலாறு படித்தால் வேலைவாய்ப்பு இருக்கிறது.மாவட்ட வரலாறு தொடங்கி, உலக வரலாறு வரை கூறுகிற எங்கள் பாடத்திட்டத்தில் தொல்லியல், கல்வெட்டுகள், சுற்றுலாவியல், ஆவணகாப்பகம் போன்ற பாடத்திட்டங்கள் உள்ளதால் எங்கள் துறை மாணவிகள் கல்வித்துறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வரலாற்று ஆசிரியர்களாகவும், கல்வியாளர்களாகவும், வரலாற்று ஆய்வாளர்களாகவும் பணியாற்ற உதவுகிறது.


அதுவும் பி.ஏ., வரலாறு, எம்.ஏ., வரலாறு, பி.ஏ., தொல்லியல் போன்ற படிப்புகளை மேற்கொண்டால் பல வேலைவாய்ப்புகள் உள்ளது. அதுவும் பி.ஏ, வரலாறு, எம்.ஏ., வரலாறு முடித்து PG டிப்ளமோவில் பட்டய மேற்ப்படிப்பு படித்தால், மாதத்திற்கு அரசாங்கம் மூலம் 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் மத்திய, மாநில தொல்லியல் துறை மூலம் அருங்காட்சியகம் (Museums), நூலகங்கள் (Libraries), புராதன காப்பகங்கள் (Archives) சுற்றுலா துறை (Tourism), பாரம்பரியத்தை பற்றி திட்டமிடுதல் மற்றும் ஆலோசனை (Heritage Consultancy & Planning), தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சி களப்பணியாளர்கள்போன்றவேலைவாய்ப்புகளும் அளிக்கப்படுகிறது.

தற்பொழுது எம்.ஏ வரலாறு, எம்.ஏ தொல்லியல் போன்ற படிப்புகளைசென்னை பல்கலைக்கழகங்கள், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகங்கள், மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய தொல்லியல் துறையில் கல்வெட்டுக்கு என்று தனிபிரிவுள்ளது. அதில் குறிப்பாக கட்டடக்கலை, கல்வெட்டுப் பிரிவுக்கு தனி வேலை வாய்ப்பு உண்டு.அதுபோல தமிழக அரசாங்க மூலம் தொல்லியல் துறையில் அகழ்வாராய்ச்சிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் உண்டு. அதுபோன்றுஐஏஎஸ் (IAS) உயர்தர பதவிகளுக்கும் வரலாற்று துறை பாடப்பிரிவு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வரலாறு மிகவும் உதவியாக இருக்கிறது. மாணவர்கள் கண்டிப்பாக வரலாறு படித்து முடித்தால் சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலை துறை, தொல்லியல் துறை, கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் போன்ற பல வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

எனவே கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் ஒரே படிப்பினை பின்தொடராமல் வேறுபட்ட படிப்புகளை படித்து நல்ல வேலை வாய்ப்புகளை பெற வேண்டும் என வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.ed


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

No comments:

Post a Comment