சோர்வு.. அமைதியின்மை.. அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க.. மூளை கட்டியாக இருக்கலாம்.! - Agri Info

Adding Green to your Life

June 11, 2024

சோர்வு.. அமைதியின்மை.. அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க.. மூளை கட்டியாக இருக்கலாம்.!

 சோர்வு மற்றும் அமைதியின்மையால் அவதிப்பட்டு வந்த பெண் ஒருவருக்கு, முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டபோது, அதிர்ச்சிகரமாக பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

உடல் நலம் தொடர்பான சிறிய கவனக்குறைவு, பல நேரங்களில் மிகப்பெரிய பிரச்சனையை கொடுத்துவிடும். ஒரு பெண்ணுக்கும் அப்படித்தான் நடந்துள்ளது. முதலில் தொடர்ந்து சோர்வும், அமைதியின்மையாலும் அவர் அவதிப்பட்டு வந்தார். இதனால், வேலைக்கு லீவு போட்டுவிட்டு, வெகுதூர பயணங்களை மேற்கொண்டார். ஆனாலும், அவருக்கு உற்சாகமும், மன அமைதியும் கிடைக்கவில்லை.

பிறகு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றார். அப்போது மருத்துவரோ, மன அமைதிக்கான சில ஆலோசனைகளை கூறியதோடு, சோர்வை நீக்க சில மருந்துகளையும் பரிந்துரைத்தார். மருத்துவரின் ஆலோசனையை சரியாக பின்பற்றினாலும், அந்த பெண்ணுக்கு பிரச்சனை போகவில்லை. இப்போது, தலைவலியும் சேர்ந்துவிட்டது.

பிரிட்டனை சேர்ந்த அவரது பெயர் மிச்செல் ரிச்சர்ட்ஸ். 55 வயதான இவர், ஆஸ்திரேலியாவுக்கு சென்று விடுமுறையை கழித்துவிட்டு, மீண்டும் வீடு திரும்பியபோது, விடுமுறைக்கு முன்பு எப்படி இருந்ததோ, அதேபோல் சோர்வு மற்றும் மன அமைதியின்மையை எதிர்கொண்டார். தலைவலி ஏற்பட்டதும் மருத்துவரை மீண்டும் அணுகி அதற்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன்பிறகு பதற்றம் அதிகரித்தது. அதற்கும் சிகிச்சை எடுத்தார். ஆனாலும், அவருக்கு எந்த பிரச்சனையும் சரியாகவில்லை.

நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமானதால், வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்தாலும், அவருக்கு எதுவுமே சரியாக இல்லை. அந்த நேரத்தில் அவருக்கு லேசான வலிப்பு ஏற்பட்டதோடு, பக்கவாதத்திற்கான சில அறிகுறிகளும் ஏற்படத் தொடங்கின. எனவே, மருத்துவரின் ஆலோசனையின்படி, முழு உடல் பரிசோதனை மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தபோதுதான், அவரது மூளையில் ஒரு சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
5 செ.மீ., அளவில் இருந்த அந்த கட்டியை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர். இது குறித்து கூறியுள்ள மிச்செல், மூளையில் கட்டி இருந்ததை, நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, இதை நான் அதிர்ச்சியாக உணருகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார். எனவே, சிறிய பிரச்சனைகள் இருந்தாலும், அதற்கான மருத்துவச் சிகிச்சையை மேற்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


🔻 🔻 🔻 

No comments:

Post a Comment