அரசு பள்ளி ஆசிரியர்களின் வேலை நாட்கள், 217ல் இருந்து, 220 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறை, நான்கு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி ஆண்டுக்கான வேலை நாட்கள், பள்ளி விடுமுறை நாட்கள் குறித்த, உத்தேச அட்டவணையை, பள்ளி கல்வி இயக்குனரகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. கடந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு, 217 வேலை நாட்கள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த ஆண்டு, மூன்று நாட்கள் அதிகரித்து, 220 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
காலாண்டு தேர்வு விடுமுறை கடந்த ஆண்டு, ஏழு நாட்களாக இருந்தது. இந்த ஆண்டு, மூன்று நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு தேதி இல்லை
கடந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள் தேதியும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இந்த முறை பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி, அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை
பாடவேளைகளுக்கான நேரத்தை பொறுத்தவரை, காலை 9:00 மணிக்கு பள்ளி வேலை நேரம் துவங்க வேண்டும். முதல், 30 நிமிடங்கள் காலை வணக்க கூட்டம் நடத்தப்படும். காலை 9:30 முதல், 10:10 மணி வரை முதல் பாட வேளையில், 10ம் வகுப்பு வரை, தமிழ் கற்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
2024 - 2025 கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் மற்றும் தேர்வு அட்டவணை விபரம்:
நிகழ்வு தேதிபுதிய கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பு ஜூன் 10முதலாம் பருவ காலாண்டு தேர்வு துவக்கம் செப்., 20காலாண்டு தேர்வு நிறைவு செப்., 28காலாண்டு விடுமுறை துவக்கம் செப்., 29இரண்டாம் பருவம் பள்ளிகள் திறப்பு அக்., 3அரையாண்டு தேர்வு துவக்கம் டிச., 16அரையாண்டு தேர்வு நிறைவு டிச., 23அரையாண்டு தேர்வு விடுமுறை துவக்கம் டிச., 24மூன்றாம் பருவம் பள்ளிகள் திறப்பு 2025 ஜன., 2ஆண்டு இறுதி தேர்வு துவக்கம் ஏப்., 9ஆண்டு இறுதி தேர்வு நிறைவு ஏப்., 17மாணவர்களுக்கு கோடை விடுமுறை துவக்கம் ஏப்., 18ஆசிரியர்களுக்கு நிர்வாக பணி துவக்கம் ஏப்., 21ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை துவக்கம் ஏப்., 28.
பொதுத்தேர்வு
கடந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள் தேதியும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இந்த முறை பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி, அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை பாடவேளைகளுக்கான நேரத்தை பொறுத்தவரை, காலை 9:00 மணிக்கு பள்ளி வேலை நேரம் துவங்க வேண்டும். முதல், 30 நிமிடங்கள் காலை வணக்க கூட்டம் நடத்தப்படும். காலை 9:30 முதல், 10:10 மணி வரை முதல் பாட வேளையில், 10ம் வகுப்பு வரை, தமிழ் கற்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment