பலரும் தங்கள் வாயை திறந்தபடி தூங்குகிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல என்றும் இரவு நேரத்தில் முறையற்ற சுவாசம் காரணமாகவே இவ்வாறு ஏற்படுவதாகவும் இதன் காரணமாக பல உடல்நலப் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வாயால் சுவாசிப்பதற்கும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் வருவதற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் இதை ஒழுங்காக குணப்படுத்தாவிட்டால் உயர் ரத்த அழுத்தம், டயாபடீஸ், இதய நோய் போன்ற தீவிர நோய்கள் வரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அறிகுறிகள் : தூங்கும் போது உள்பட அனைத்து நேரமும் வாயால் சுவாசிப்பதால் பல உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெரியவர்களாக இருந்தால் இது தொண்டை வறட்சியையும், வாய் துர்நாற்றத்தையும், காலை நேர தலைவலியையும் மூளைச் சோர்வையும் உண்டாக்கும். இந்த அறிகுறிகளை எல்லாம் பார்க்கும் போது நாம் குறைவான நேரம் தூங்கி சோர்வாக இருப்பதை உணர்த்துகிறது. இதுவே குழந்தைகள் என்றால், மோசமான வளர்ச்சி, வளைந்த பற்கள், முகச்சிதைவு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். இப்படி வாயால் சுவாசிப்பது பல சமயங்களில் ஏற்கனவே இருக்கக்கூடிய மற்ற உடல்நலக் கோளாறுகளையும் அதிகப்படுத்திவிடும்.
காரணங்கள் : பெரும்பாலான சமயங்களில் வாயால் சுவாசிப்பதற்கு காரணமாக இருப்பது மோசமான நாசித் துவார காற்று வழிப்பாதை. இந்தப் பாதை சில சமயங்களில் அடைத்துக்கொண்டோ அல்லது குறுகியதாகவோ இருக்கலாம். இதனால் ஆக்சிஜன் உள்ளிழுக்கப்படுவது குறைந்து சுவாசிப்பது சிரம்மாகிப் போகும். ஆகவே மூக்கடைப்பு தான் ஒருவர் மூக்கால் சுவாசிப்பதற்கு காரணமாக இருக்கிறது.
சிகிச்சை :
எதனால் இவ்வாறு வாயால் சுவாசிக்கிறீர்கள் என்பதை பொறுத்து இதன் சிகிச்சை மாறுபடும். பொதுவாக சளி மற்றும் அலர்ஜி காரணமாக வரக்கூடிய மூக்கடைப்பை குணப்படுத்த மருந்துகள் தரப்படும்.
CPAP இயந்திரம் : இந்த இயந்திரம் காற்று வழி அழுத்தத்தை பராமரித்து நாக்கு மற்றும் தொண்டையில் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
வாயை மூடுதல் : இந்த முறையில் எதையாவது வைத்து உதடுகளை இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். இதன்மூலம் வாயால் சுவாசிப்பது தடுக்கப்படும்.
பல் சீரமைப்பு : க்ளிப்புகள் மற்றும் கம்பிகள் பயன்படுத்தி தாடை மற்றும் பல் வரிசையை சரிபடுத்துவதன் மூலம் காற்றோட்டத்தை அதிகப்படுத்த முடியும்.
முகப்பயிற்சி தெரபி : தொண்டை தசைகளுக்கு நேரடியாக சிகிச்சை கொடுப்பதன் மூலம் காற்று வழிப்பாதையை திறந்தபடி வைக்க முடியும்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment