ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் (மிஷன் வத்சல்யா) பணியாளர் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், புறக்கணித்தல் மற்றும் சுரண்டல்கள் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய துன்புறும் சூழல்களைத் திறம்பட குறைந்து குழந்தைகளுக்கு விசாலமான, வலிமைமிக்க பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்யும் நோக்கத்துடன் இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
அந்த வகையில் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் (மிஷன் வத்சல்யா) கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கீழ்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவியாளர்(1 பணியிடம்) ,இதற்கு தொகுப்பூதியமாக ஒரு மாதம் ரூ.11,916/ என்று வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குவதில் தேர்ச்சி மற்றும் ஆற்றல் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
இந்த பதவிக்கான விண்ணப்படிவத்தினை https://tiruchirappalli.nic.in/ இணையதளத்தில் இருத்து பதிவிறக்கம் செய்து கொண்டு அதனை பூர்த்தி செய்து அதனை 06.07.2024 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் (நேரிலோ/தபால் மூலமாகவோ) அனுப்பப்பட வேண்டும்.
குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E.1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி - 620 001. தொலைபேசி எண்: 0431-2413055.
அத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: 1) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் 2) சுயசான்றொப்பமிட்ட கல்விச்சான்றுகளின் நகல். 3) சுயசான்றொப்பமிட்ட பணி அனுபவ சான்றுகளின் நகல் மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: 1) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் 2) சுயசான்றொப்பமிட்ட கல்விச்சான்றுகளின் நகல். 3) சுயசான்றொப்பமிட்ட பணி அனுபவ சான்றுகளின் நகல் மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment