சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூடிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூடிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு 18 காலி பணியிடங்கள் உள்ளன. பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் போன்ற துறைகளில் 70 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ. அல்லது பி.டெக் முடித்து கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.30 ஆயிரம்
வயது வரம்பு: 9-6-2024ஆம் தேதியின்படி 28 வயதுக்குள் இருத்தல் வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.500, பிற பிரிவினருக்கு ரூ.100. கனரா வங்கி மூலமாக ஆன்லைனில் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 29-07-2024 ஆகும்.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment