மலச்சிக்கல் காரணமாக தொடர்ந்து குடல் வலி இருந்தால், அது உங்கள் தினசரி வாழ்க்கையையும் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் கடுமையாக பாதிக்கும். மலம் கழிக்கும் போது நீங்கள் வலியை அணுபவித்தால் அதற்கு இறுகிப்போன மலமே காரணமாகும். இது எதனால் ஏற்படுகிறது, இதற்கான மருத்துவ சிகிச்சை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
மலச்சிக்கலின் அறிகுறிகளை புரிந்துகொள்தல் :
வாரத்திற்கு மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழித்தாலோ அல்லது மலம் கழிக்கும் போது மிகவும் சிரமப்பட்டாலோ, அது மலச்சிக்கலின் அறிகுறியாகும். தசைபிடிப்பு, வயிற்று வலி, குறைவாக சாப்பிட்டும் வயிறு நிறைவடைந்தது போல் உணர்வது போன்றவையும் மலச்சிக்கலின் அறிகுறிகளே. அடிவயிற்றில் தொடர்ந்து வலி ஏற்பட்டால், அது எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறியின் (IBS) அறிகுறியாகும். சில சமயங்களில் இந்த வலி மலம் கழிக்கும்போது ஏற்படும் நீரிழப்பு காரணமாகவும் வரலாம்.
News18
நாள்பட்ட மலச்சிக்கலால் வரக்கூடிய பிரச்சனைகள் :
தொடர்ந்து மலச்சிக்கல் இருந்து வந்தால் பல உடல்நலப் பிரச்சனைகள் வருவதற்கு காரணமாக அமையும். ஆகையால் இதற்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். நாள்பட்ட மலச்சிக்கல் பெருங்குடலின் சுவற்றில் சுளுக்கை ஏற்படுத்தி வடுக்களை உண்டாக்கி பெருங்குடல் அழற்சிக்கு காரணமாக இருக்கிறது. அதற்கடுத்ததாக பெருங்குடல் முழுதும் அடைத்துக்கொண்டால், வாய்வு அல்லது மலத்தை வெளியேற்ற முடியாது. இது நாளடைவில் தீவிர மலச்சிக்கலை உண்டாக்கும்.
குடல் வலிக்கான சிகிச்சை :
நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். இது மலம் கழிப்பதை இலகுவாக்கும்.
சீரான உடற்பயிற்சி செய்வதன் மூலம் குடல் இயக்கம் மேம்பட்டு மலம் கழிப்பது எளிதாகும்.
கழிவறைக்கு செல்வதை ஒருபோதும் தாமதப்படுத்தாதீர்கள்.
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தினமும் இத்தனை மணிக்கு கழிவறைக்கு செல்ல வேண்டும் என்ற அட்டவணையை தயார் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் குடல் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.h
குடல் இயக்கத்தை வேகப்படுத்தவும் நாள்பட்ட மலச்சிக்கலை குணப்படுத்தவும் மருந்தகத்தில் உள்ள சில மலமிளக்கி மாத்திரைகள் பயனுள்ளதாக இருக்கும்.
எப்போது மருத்துவமணை செல்ல வேண்டும்?
வீட்டு வைத்திய முறைகள் செய்து பார்த்த பிறகும் அல்லது வாழ்க்கைமுறையை மாற்றிய பிறகும் மலச்சிக்கல் அறிகுறிகள் போகவில்லை என்றால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும். காய்ச்சல், வாந்தி அல்லது குமட்டல், வாயுக்களை வெளியேற்ற முடியாமை, கடுமையான அல்லது தொடர்ச்சியான கீழ்முதுகு வலி மற்றும் வயிற்று வலி இருந்தாலோ, காரணமின்றி உடல் எடை குறைதல் அல்லது மலத்தில் ரத்தம் வெளியேறுவது போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் பல உடல்நலப் பிரச்சனைகளை தவிர்த்து நிம்மதியாக நோயின்றி வாழலாம்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment