நட்ஸ் வறுத்து சாப்பிடுவது நல்லதா.. அல்லது பச்சையாக சாப்பிடுவது நல்லதா? - Agri Info

Adding Green to your Life

June 25, 2024

நட்ஸ் வறுத்து சாப்பிடுவது நல்லதா.. அல்லது பச்சையாக சாப்பிடுவது நல்லதா?

 நட்ஸ் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் புரதம் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருப்பதால் இவை ஊட்டச்சத்தின் களஞ்சியமாக விளங்குகின்றன. இவற்றை அப்படியே சாப்பிட்டு மகிழலாம் என்றாலும் கூட பலர் நட்ஸ் மற்றும் விதைகளை வறுத்து சாப்பிட விரும்புகின்றனர். எனினும் வறுத்தல் செயல்முறை அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை குறைத்து விடுவதாக ஒரு சிலர் விவாதித்து வருகின்றனர்.

நிச்சயமாக நட்ஸ் மற்றும் விதைகளை வறுக்காமல் பச்சையாக சாப்பிடுவது அதிக ஆரோக்கியமானது. நட்ஸ் மற்றும் விதைகளை வறுப்பதால் ஏற்படக்கூடிய ஊட்டச்சத்து மாற்றம் என்பது நீங்கள் அதனை எந்த வெப்பநிலை மற்றும் நேரத்தை பொறுத்து அமைகிறது. குறிப்பாக வைட்டமின் E மற்றும் ஒரு சில B வைட்டமின்கள் வெப்பத்திற்கு உணர்திறன் கொண்டிருப்பதால் அவை வறுத்தல் செயல்முறையின் போது அழிக்கப்படுகிறது. எனினும் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஜிங்க் போன்ற பெரும்பாலான மினரல்கள் நிலையாக இருப்பதால் அவை வெப்பத்தினால் பாதிப்படையாது.

நட்ஸ் மற்றும் விதைகளை வறுக்கும் பொழுது அதில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிலையாக இருக்கும். ஆனால் அதே நேரத்தில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை உருவாக்குகிறது. அவற்றை அதிக அளவில் சாப்பிடும் பொழுது அதனால் புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் ஏராளம் உண்டு.

நட்ஸ் மற்றும் விதைகளை வறுப்பதால் கிடைக்கும் பயன்கள் : 


நட்ஸ் மற்றும் விதைகளை வறுத்து சாப்பிடுவதால் இத்தனை பக்க விளைவுகள் இருந்தாலும், அதனால் ஒரு சில நன்மைகளும் நமக்கு கிடைக்க தான் செய்கிறது. நட்ஸ் வகைகளை நாம் வறுக்கும் பொழுது அவற்றில் உள்ள நுண்ணுயிரிகள் அகற்றப்படுகிறது.

மேலும் நச்சு மற்றும் விதைகளில் ஃபைட்டிக் அமிலம் மற்றும் ஆக்ஸலேட் போன்ற எதிர் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த காம்பவுண்டுகள் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து போன்ற அத்தியாவசிய மினரல்களுடன் ஒட்டிக் கொள்கின்றன. ஆகவே அவற்றை வறுத்து சாப்பிடும் பொழுது இது போன்ற எதிர் ஊட்டச்சத்துக்கள் அழிக்கப்பட்டு மினரல்களின் உறிஞ்சுதல் மேம்படுத்தப்படுகிறது .

நட்ஸ் மற்றும் விதைகளை வறுப்பதால் செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மேம்படுத்தப்படுமா?


கட்டாயமாக வறுத்தல் செயல்முறை செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. வறுத்தல் செயல்முறை மூலம் கிடைக்கும் வெப்பமானது செரிமான செயல்முறையின்பொழுது சிக்கலான காம்பவுண்டுகளை எளிதில் உடைப்பதற்கும், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. எனினும் வறுத்தல் செயல்முறையை அளவுக்கு அதிகமாக செய்யக்கூடாது. ஒருவேளை நீங்கள் அளவுக்கு அதிகமான வெப்ப நிலையில் நீண்ட நேரத்திற்கு நட்ஸ் மற்றும் விதைகளை வறுக்கும் பொழுது செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை பராமரிக்கும் சமநிலையில் சீர்குலைவு ஏற்படுகிறது.

அடுத்தபடியாக வறுத்தல் செயல்முறை நச்சு மற்றும் விதைகளுக்கு மொறுமொறுப்பான அமைப்பை தருவதால் அது மேலும் சுவையானதாக மாறுகிறது. இது அவற்றிற்கு தனித்துவமான சுவையை தருகிறது. இதனால் பேக் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளில் வறுத்த நட்ஸ் வகைகள் குறிப்பாக பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் மிதமான ஃபிளேவர் மற்றும் மென்மையான அமைப்பு தேவைப்படும் ஐஸ்கிரீம், ஸ்மூத்தி மற்றும் சாலட் போன்றவற்றில் நட்ஸ் மற்றும் விதைகள் பச்சையாக நறுக்கி சேர்க்கப்படுகின்றன.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment