சென்னை ஆதிதிராவிடர் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி: தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? - Agri Info

Adding Green to your Life

June 30, 2024

சென்னை ஆதிதிராவிடர் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி: தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி?


அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிய தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்  தேர்வு நடத்தப்பட்டு பணிநியமனங்கள் செய்யப்படும். எனினும் அவ்வப்போது தற்காலிக ஆசிரியர்களையும் அரசு அவ்வப்போது நியமிக்கும். அந்த வகையில், சென்னையில் உள்ள 3 ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 6 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிகளுக்கு தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியர்  ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கு தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு இருக்க வேண்டும்.

முதுகலை டிகிரியுடன், பி.எட் படிப்பு., முடித்திருக்க வேண்டும். முதுகலை ஆசிரியர் பதவிக்கு பொதுப்பிரிவினருக்கு 40 மற்றும் எஸ்.சி, எஸ்.டி, பி.சி, எம்.பி.சி வகுப்பினருக்கும் பொதுப்பிரிவு உட்பட அனைத்து பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டு தளர்வு உள்ளது.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் 

தற்காலிக பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்

பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள், பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள், மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் மற்றும் அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://chennai.nic.in/ என்ற இணைய தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், சென்னை மாவட்ட ஆட்சியரகம்.  05.07.2024 மாலை 5.45க்குள் விண்ணப்பம் அனுப்பபட வேண்டும்

 

 

No comments:

Post a Comment