Search

வெறும் வயிற்றில் பால் குடித்தால் நல்லதா, கெட்டதா...?

 பாலில் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பல ஊட்டச்சத்துகள் உள்ளது. பாலில் உள்ள கால்சியம் நம் எலும்புகளையும் பற்களையும் வலுவூட்டி எலும்புப்புரை நோய் வராமல் தடுக்க உதவுகிறது. பாலில் உள்ள புரதம் தசைகளின் வளர்ச்சிக்கும் சுறுசுறுப்பான வாழ்க்கைமுறைக்கும் உதவி செய்கிறது.

வைட்டமின் பி12 போன்றவை நரம்பு செயல்பாட்டையும் ஆற்றல் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. மேலும் பாலில் உள்ள ரிபோஃப்ளேவின் ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கிறது. இதுதவிர பாலில் இருக்கும் பாஸ்பரஸ் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

பாலை அப்படியே குடிக்கலாம்; அல்லது ஸ்மூதிஸ், டெஸர்ட், செரல்ஸ் ஆகியவற்றில் கலந்தும் சாப்பிடலாம். சரிவிகித டயட்டில் முக்கியமான உணவாக இருக்கும் பால், நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உடல்நலத்திற்கும் தேவையான ஊட்டச்சத்தை தருகிறது.

இவ்வுளவு சத்துகள் நிறைந்த பாலை வெறும் வயிற்றில் குடிக்கலாமா? அப்படி குடிப்பதால் அதிலுள்ள சாதக, பாதகம் என்ன?

சாதகம்:

பாலில் நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவும் கால்சியம், புரதம், வைட்டமின் (பி12), தாதுக்கள் (பாஸ்பரஸ்) உள்ளது.

பாலில் அதிகளவு தண்ணீர் இருப்பதால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது. அதுவும் காலையில் எழுந்ததும் இதை குடிக்கும் போது கூடுதல் பயனைத் தருகிறது.

பாலில் நல்ல தரமான புரதம் உள்ளது. நம்முடைய தசை வளர்ச்சிக்கு இது அவசியமாகும்.

வெறும் வயிற்றில் பால் பருகுவதால் வாய்வுத்தொல்லை, ஏப்பம் போன்ற பிரச்சனைகள் சரியாகும் என சிலர் கூறுகிறார்கள். பாலில் உள்ள கொழுப்பு வயிற்றின் மென்படலங்களில் படர்ந்து எரிச்சலை குறைக்கிறது.

பால் பருகுவதால் வயிறு நிறைந்த திருப்தி கிடைக்கிறது. இதன் மூலம் நம்முடைய பசி அடங்குவதோடு காலையிலேயே அதிகம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.

பாதகம்

  • சில நபர்களுக்கு, குறிப்பாக லாக்டோஸ் அல்லது பால் பொருட்கள் மீது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு வெறும் வயிற்றில் பால் குடிப்பதனால் வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை, வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகள் வர அதிக வாய்ப்புள்ளது.

  • பாலில் கொஞ்சமாக அசிடிக் தன்மை உள்ளது. ஆகையால் இதை வெறும் வயிற்றில் பருகும் போது சிலருக்கு ஆசிட் உற்பத்தி உடலில் அதிகரித்து ஏப்பம் அல்லது இரைப்பை அழற்சி போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன.

  • காலையிலேயே வெறும் வயிற்றில் பால் மட்டும் பருகினால், இதிலுள்ள கால்சியம் சத்து காரணமாக சில மருந்துகள் செயல்படாது அல்லது இரும்புச்சத்து முழுதாக உடலில் சேராது.

  • பாலில் அதிகளவு கலோரி உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் தினமும் பால் பருகி வந்தால் நாளடைவில் உடல் எடை அதிகரிக்கும்.

  • அரிதான சமயங்களில் பாலில் உள்ள புரதம் சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். இவர்கள் வெறும் வயிற்றில் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
    வெறும் வயிற்றில் பால் குடிப்பது உடல்நலத்திற்கு பயனளிக்குமா இல்லையா என்பதை ஒருவரின் உடல்நிலை, உணவுப்பழக்கம், சகிப்புத்தன்மை ஆகியவற்றை பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

    🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment