சிறுநீரக புற்றுநோயின் போது செல்கள் கேடு விளைவிப்பதாக (புற்றுநோய்) மாறி, கட்டுப்பாட்டை மீறி வளர்ந்து கட்டியாக உருவாகிறது. கிட்டத்தட்ட அனைத்து சிறுநீரக புற்றுநோய்களும் முதலில் சிறுநீரகத்தில் உள்ள சிறிய குழாய்களின் மென் படலங்களில் தான் தோன்றும்.
சிறுநீரக புற்றுநோயின் பொதுவான வகையாக சிறுநீரக செல் கார்சினோமா உள்ளது. கிட்டத்தட்ட 90% சிறுநீரக புற்றுநோயாளிகள் இதனால் தான் பாதிப்படைகிறார்கள். இடைநிலை செல் கார்சினோமா மற்றும் குழந்தைகளிடம் காணப்படும் வில்ம்ஸ் கட்டி ஆகியவை குறைந்த சதவிகிதத்தினரை தாக்குகிறது.
சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை பெற்று குணமாகும் வாய்ப்பு அதிகமாகும்.
சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
பெரும்பாலான சமயங்களில் நோயாளிகளுக்கு சிறுநீரகப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஏனெனில் கட்டி பெரியதாக வளர்ந்த பிறகே அறிகுறிகள் தோன்றக்கூடும். அப்போது கீழே கூறப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்: அவை,
1. சிறுநீரில் இரத்தம்
2. வயிற்றின் ஓரத்தில் கட்டி
3. பசியின்மை
4. தொடர்ந்து ஒரு பக்கத்தில் மட்டும் இடைவிடாத வலி
5. காரணமின்றி உடல் எடை குறைதல்
6. காரணமின்றி காய்ச்சல் வந்தாலும் உடனே குணமாகாமல் வாரக்கணக்கில் நீடிக்கும்
7. சோர்வு
8. உங்கள் கணுக்கால் மற்றும் முழங்கால்களில் வீக்கம்
9. சிறுநீரக புற்றுநோய் மற்ற பகுதிகளுக்கு பரவினால், இதுபோன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்:
10. மூச்சு திணறல்
11. இருமலில் இரத்தம்
12. எலும்புகளில் வலி
சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சில நபர்களுக்கு வழக்கமான அடிவயிற்றில் வலி இருக்கலாம். இன்னும் சிலருக்கோ மிகவும் நுட்பமான அறிகுறிகள் வெளிப்படலாம். இன்னும் சிலருக்கோ புற்றுநோய் முற்றிய நிலையை அடையும் வரை அறிகுறிகள் எதையும் வெளிபடுத்தாமல் இருக்கலாம்.ஆகவே விழிப்புடன் இருந்து அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால், குறிப்பாக அவை தொடர்ந்து இருந்தாலோ அல்லது நாளடைவில் மோசமானாலோ உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான ஆபத்து காரணிகள் சில:
குடும்பத்தில் யாருக்காவது கடந்த காலத்தில் சிறுநீரக புற்றுநோய் இருந்தால் இந்நோய் வரக்கூடிய ஆபத்து அதிகமுள்ளது.
அதேப்போல் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட சிகரெட் மற்றும் புகையிலை பழக்கம் உடையவர்கள் சிறுநீரக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கும் சிறுநீரக புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமுள்ளது. ஆகையால் ஆரோக்கியமான டயட், சீரான உடற்பயிற்சி ஆகியவற்றை கடைபிடித்து உங்கள் உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
ஹைபர் டென்சன் (ஊயர் ரத்த அழுத்தம்)
வயது முதிர்வு
ரசாயன தொழிற்சாலைகளில் பணியாற்றுவது
No comments:
Post a Comment