உங்க குழந்தை அடிக்கடி வயிறு வலிக்குதுனு சொல்றாங்களா..? இதுதான் காரணம்.. உடனே செக் பண்ணுங்க.! - Agri Info

Education News, Employment News in tamil

June 22, 2024

உங்க குழந்தை அடிக்கடி வயிறு வலிக்குதுனு சொல்றாங்களா..? இதுதான் காரணம்.. உடனே செக் பண்ணுங்க.!

 உணவு மூலம் பரவும் வைரஸ்கள் மற்றும் கணிக்க முடியாத பருவமழை காரணமாக பெங்களூரில் உள்ள குழந்தைகளிடத்தில் குடல் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. பாதிக்கப்பட்ட குழந்தைகளிடத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு, பசியின்மை, நீரிழப்பு, உடல் வலி, சோர்வு, வயிற்று வலி போன்ற அறிகுறிகள் தென்படும்.

குடல் பாதையில் ஏற்படும் தொற்று காரணமாகவே வயிற்றுப்போக்கு உண்டாகிறது. இதற்கு பல வகையான பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக பருவமழையின் போது உணவு மூலம் பரவும் நோய்கள் காரணமாக இரைப்பை குடல் பிரச்சனைகள் அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மழைக்காலங்களில் ஈரப்பதமும், மாய்ஸ்சரைசரும் அதிகரிப்பதால் உணவு மற்றும் தண்ணீரில் ஒட்டுண்ணிகள், பாக்டீரியா போன்றவை பல்கி பெருகுகின்றன. மாசடைந்த தெரு உணவுகள், மிச்சமான உணவுகளை ஒழுங்காக ஸ்டோர் செய்யாமல் இருப்பது, தூய்மையற்ற தண்ணீர் காரணமாக காலரா, டைபாய்டு, இரைப்பை குடல் அழற்சி போன்ற நோய்கள் வருவது அதிகரிக்கின்றன.

குழந்தைகளிட்த்தில் இரைப்பை குடல் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்க என்ன காரணம்?

  • முதற் காரணம் டயட். சர்க்கரை, கொழுப்பு அதிகமுள்ள மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குழந்தைகள் அதிகமாக உட்கொள்கிறார்கள். இதனால் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றை போதுமான அளவு எடுத்துக்கொள்ளாததன் காரணமாக மலச்சிக்கல் பிரச்சனை குழந்தைகளுக்கு வருகிறது.

  • ரோடோவைரஸ் மற்றும் நோரோவைரஸ் போன்றவையும் இரைப்பை குழல் அழற்சியை உண்டாக்கி வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியை வரவழைக்கின்றன. அதேப்போல் கெட்டுப்போன உணவு அல்லது மாசடைந்த தண்ணீர் மூலம் பரவும் சால்மோனெல்லா அல்லது ஈ-கோலி பாக்டீரியாவாலும் இதேப்போன்ற அறிகுறிகள் குழந்தைகளிடத்தில் காணப்படுகின்றன. சில சமயங்களில் வேர்க்கடலை, முட்டை, ஷெல்ஃபிஷ் போன்ற உணவுகள் அலர்ஜியை உண்டாக்குவதாலும் குடல் சார்ந்த பிரச்சனைகள் வருகின்றன.

  • மன அழுத்தம், படபடப்பு போன்ற உளவியல் காரணிகளும் குழந்தைகளின் செரிமான ஆரோகியத்தில் குறிப்பிடத்குந்த தாக்கத்தை செலுத்துகின்றன. குழந்தைகள் தங்களது மனரீதியான பிரச்சனைகளை வயிற்று வலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற உடலியல் அறிகுறிகள் மூலமே வெளிப்படுத்துகிறார்கள். குறிப்பிட்ட சில மருந்துகளை தவறுதலாக கொடுக்கும் போது கூட இதுபோன்ற பிரச்சனைகள் வருகிறது.

  • எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) மற்றும் அடிவயிற்று வலி ஆகியவை குழந்தைகளிடத்தில் பரவலாக காணப்படுகின்றன. நீரிழப்பு மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் மலச்சிக்கல் மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. செரிமான ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நீர்ச்சத்து எவ்வுளவு முக்கியமானது என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

    • அல்சர், க்ரோன் போன்ற குடல் அழற்சி நோய்கள் தீவிர இரைப்பை குடல் அறிகுறிகள் வருவதற்கு காரணமாக இருக்கின்றன. தைராய்டு கோளாறுகள் அல்லது டயாபடீஸ் போன்ற நாள்பட்ட பிரச்சனைகளும் செரிமான செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளின் இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு மூலக் காரணம் என்ன என்பதை கண்டறிந்தால் மட்டுமே அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள முடிவதோடு இதுபோன்ற பிரச்சனைகள் இனி வராமல் தடுக்க முடியும்.


    • 🔻 🔻 🔻 

No comments:

Post a Comment