ஜோஹோ நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க! - Agri Info

Adding Green to your Life

June 25, 2024

ஜோஹோ நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 பிரபல ஐ.டி நிறுவனமான ஜோஹோ (ZOHO) நிறுவனத்தில் சாஃப்ட்வேர் டெவலப்பர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


தமிழ்நாட்டில் உள்ள முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. ஜோஹோ நிறுவனம் தமிழகத்தை மையமாகக் கொண்டு சென்னை, மதுரை, நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. நல்ல வேலை வாய்ப்பு சூழல் உள்ள இந்த நிறுவனத்தில் பணிபுரிய மென்பொறியாளர்கள் பலரும் விரும்புவர்.

இந்தநிலையில், ஜோஹோ நிறுவனத்தில் சாஃப்ட்வேர் டெவலப்பர் (Software Developer) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவர். சென்னையில் இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும்.

இந்த பணிக்கு சி++ (C++), ஜாவா (Java) தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு 0 முதல் 4 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். புதியவர்களும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளதால் பணிக்கு தேவையான திறமை பெற்று, அனுபவம் இல்லாமல் இருப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

புதிய சாப்ட்வேர் ப்ரோகிராமை டெவலப் செய்தல், டெஸ்ட் செய்தல் உள்ளிட்ட வேலைகளை செய்ய வேண்டும். மேலும் பிழையின்றி கோடிங் (Code) எழுத வேண்டும். சாப்ட்வேர் ப்ரோகிராமில் ஏற்படும் டீபக் (Debug), டிரப்ள்ஷூட் (Troubleshoot) பிரச்சனைகளை தீர்க்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் புதிய தொழில்நுட்பத்தை கற்பதில் ஆர்வமாக இருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும் வரை தேர்வு செயல்முறை இருக்கும். எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பணியிடங்களுக்கான சம்பள விபரங்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால், கல்வித் தகுதி, முந்தைய பணி அனுபவம் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://careers.zohocorp.com/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment