வெற்றிலைகள் நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை கொண்டுள்ளன. ஆன்மீக விழாக்கள், சடங்குகள், பூஜைகள் முதல் திருமணம் வரை பல மங்களகரமான நிகழ்வுகளில் தவறாமல் இடம்பெறும் முக்கிய ஒன்றாக வெற்றிலை இருக்கிறது.
தற்காலத்தில் பலருக்கும் வெற்றிலையின் மகிமை தெரிவதில்லை. ஆன்மீக நிகழ்வுகள் அல்லது திருமணங்கள் முடிவில் வெற்றிலையை கொடுத்து போட சொன்னால் கூட, ஏதோ தீய விஷயத்தை செய்ய சொல்வது போல விலகி ஓடுவதை பார்க்க முடிகிறது. உண்மையில் ஆயுர்வேதத்தின்படி வெற்றிலைகள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்க கூடியவை என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை.
சாப்பிட்டு முடித்த பிறகு பொதுவாக வெற்றிலை, பாக்கு போட்டு கொள்வது நம்முடைய முன்னோர்களின் பழக்கம். இன்று கூட பலரும் இந்த பழக்கத்தை கடைபிடித்து பல நன்மைகளை பெறுகிறார்கள். வெற்றிலை மற்றும் பாக்கு இரண்டும் சேர்ந்து கொடுக்கும் நறுமணம் மற்றும் சக்திவாய்ந்த சுவை மவுத் ஃப்ரஷ்னராக செயல்படுகிறது. தவிர வெற்றிலையில்அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் பி2 போன்ற பல சத்துக்கள் நிரம்பி இருப்பதாக கூறப்படுகிறது.
வெற்றிலையின் சக்திவாய்ந்த சுவையை அனுபவிக்க மற்றும் அதன் அற்புதமான பலன்களைப் பெற paan shots-ஐ சாப்பிடலாம். ஏனென்றால் வெற்றிலை இயற்கையாகவே சூடான விளைவை தர கூடியது. ஆனால் பான் ஷாட்ஸ்களில் குல்கண்ட், தேங்காய் மற்றும் பெருஞ்சீரகம் விதைகள் சேர்க்கப்படுவதால் உடலை குளிரூட்டும். எனவே கோடை வெப்பத்திற்கு மத்தியில் வெற்றிலையின் பலன்களை பெற நீங்கள் பான் ஷாட்களை எடுத்து கொள்ளலாம்.
தினசரி சாப்பிட்டு முடித்த பின் வெற்றிலை மெல்லுவதால் கிடைக்கும் நன்மைகள்:
வெற்றிலைகளில் செரிமான நொதிகளின் (digestive enzymes) உற்பத்தியை அதிகரிக்கும் காமபவுண்ட்ஸ் உள்ளன. இது உணவை மிக சிறப்பாக உடைக்க உதவுகிறது. இதனால் வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பொதுவான செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
வெற்றிலைகளில்பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே இவை வாய்வழி தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்கவும், சுவாசத்தை புத்துணர்ச்சியாக வைக்கவும் உதவும். வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் உமிழ்நீர் உற்பத்தி அதிகரிக்கிறது, இது இயற்கையாகவே உங்கள் வாயை சுத்தப்படுத்துகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாவதை தடுக்கிறது.
தினசரி வெற்றிலையை எடுத்து கொள்வது வளர்சிதை மாற்ற செயல்முறையைத் தூண்டும். இது உணவை மிகவும் திறம்படச் செயலாக்க உடலுக்கு உதவுவதோடு, எடை மேலாண்மைக்கு உதவும்.
வெற்றிலையில் நறுமண கூறுகள் (aromatic components) அடங்கி உள்ள நிலையில் ஏலக்காய் மற்றும் கிராம்பு போன்ற கூடுதல் பொருட்களுடன் இணைந்து இது வலிக்கு அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது மற்றும் வாய் துர்நாற்றத்தை குறைக்க உதவுகிறது. மேலும் உணவுகளை எடுத்து கொண்ட பின் வாய் மற்றும் சுவாசத்தை ஃபிரெஷ்ஷாக வைத்து கொள்ள வெற்றிலை உதவும்.
வெற்றிலையில் உள்ள இயற்கையான சில கலவைகள் நம்முடைய மனதிலும், உடலிலும் அமைதியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன, ரிலாக்ஸை ஊக்குவித்து மன அழுத்தம் குறைய உதவுகின்றன மற்றும் நன்றாக தூங்க உதவுகின்றன.
No comments:
Post a Comment