சிறிய பட்டாம்பூச்சி வடிவில் நம் கழுத்துப் பகுதியில் இருப்பதே தைராய்டு சுரப்பி. நம்முடைய மெட்டபாலிஸம், ஆற்றல், ஒட்டுமொத்த உடல் செயல்பாடு ஆகிய அனைத்தையும் ஒழுங்குப்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றுகிறது. முக்கியமாக பெண்களுக்கு தைராய்டு ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். ஏனென்றால் கருவுறுதல் முதல் மனநல ஆரோக்கியம் வரை என அவர்கள் வாழ்க்கையின் பல அம்சங்களில் தைராய்டு செயலிழப்பு மிகப்பெரிய தாக்கம் செலுத்துகிறது.
தைராய்டு செயலிழப்பின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் இதை எளிதாக பராமரிக்கலாம்.
ஹைப்பர்தைராய்டிஸம்: ஒருவேளை தைராய்டு அளவுக்கதிகமாக செயல்பட்டால்..
தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோனை சுரக்கும் போது ஹைப்பர்தைராய்டிஸம் உண்டாகிறது. இந்த அதிகப்படியான ஹார்மோன் உடலின் மெடபாலிஸத்தை வேகப்படுத்தி பல அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
இதை முறையாக பராமரிக்காவிட்டல் பல சிக்கல்களை உருவாக்கும். இதன் முக்கியமான அறிகுறிகள் சில…
பெண்களுக்கு காரணமின்றி உடல் எடை குறைதல் சீரற்ற இதயத்துடிப்பு, இதயம் வேகமாக துடிப்பது, படபடப்பு போன்றவை எச்சரிக்கை தரும் அறிகுறிகளாகும்.
அதிகப்படியாக வியர்வை வருதல் மற்றும் வெயில் சகிப்பின்மை.
எந்தவொரு காரணமும் இன்றி வழக்கத்திற்கு மாறான பதட்டம், எரிச்சல், பயம்
கை மற்றும் விரல்களில் சிறு நடுக்கம்
சுறுசுறுப்பாக உணர்ந்தாலும், சோர்வாகவும் களைப்பாகவும் இருப்பது போல் பெண்கள் உணர்வார்கள். குறிப்பாக தசைகளில் இந்த உணர்வு அதிகமாக இருக்கும்.
இன்சோம்னியா அல்லது தூக்கத்தில் நடப்பது
சீரற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் நாட்கள் தள்ளிப்போவது
சிறிய பட்டாம்பூச்சி வடிவில் நம் கழுத்துப் பகுதியில் இருப்பதே தைராய்டு சுரப்பி. நம்முடைய மெட்டபாலிஸம், ஆற்றல், ஒட்டுமொத்த உடல் செயல்பாடு ஆகிய அனைத்தையும் ஒழுங்குப்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றுகிறது. முக்கியமாக பெண்களுக்கு தைராய்டு ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். ஏனென்றால் கருவுறுதல் முதல் மனநல ஆரோக்கியம் வரை என அவர்கள் வாழ்க்கையின் பல அம்சங்களில் தைராய்டு செயலிழப்பு மிகப்பெரிய தாக்கம் செலுத்துகிறது.
தைராய்டு செயலிழப்பின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் இதை எளிதாக பராமரிக்கலாம்.
விளம்பரம்
ஹைப்பர்தைராய்டிஸம்: ஒருவேளை தைராய்டு அளவுக்கதிகமாக செயல்பட்டால்..
தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோனை சுரக்கும் போது ஹைப்பர்தைராய்டிஸம் உண்டாகிறது. இந்த அதிகப்படியான ஹார்மோன் உடலின் மெடபாலிஸத்தை வேகப்படுத்தி பல அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
இதை முறையாக பராமரிக்காவிட்டல் பல சிக்கல்களை உருவாக்கும். இதன் முக்கியமான அறிகுறிகள் சில…
பெண்களுக்கு காரணமின்றி உடல் எடை குறைதல்
சீரற்ற இதயத்துடிப்பு, இதயம் வேகமாக துடிப்பது, படபடப்பு போன்றவை எச்சரிக்கை தரும் அறிகுறிகளாகும்.
அதிகப்படியாக வியர்வை வருதல் மற்றும் வெயில் சகிப்பின்மை.
எந்தவொரு காரணமும் இன்றி வழக்கத்திற்கு மாறான பதட்டம், எரிச்சல், பயம்
கை மற்றும் விரல்களில் சிறு நடுக்கம்
சுறுசுறுப்பாக உணர்ந்தாலும், சோர்வாகவும் களைப்பாகவும் இருப்பது போல் பெண்கள் உணர்வார்கள். குறிப்பாக தசைகளில் இந்த உணர்வு அதிகமாக இருக்கும்.
இன்சோம்னியா அல்லது தூக்கத்தில் நடப்பது
சீரற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் நாட்கள் தள்ளிப்போவது
நரம்பு பாதிப்பை குணப்படுத்த உதவும் 8 உணவுகள்.!
நரம்பு பாதிப்பை குணப்படுத்த உதவும் 8 உணவுகள்.!மேலும் செய்திகள்…
ஹைபோதைராய்டிஸம்: ஒருவேளை தைராய்டு குறைவாக செயல்பட்டால்..
தைராய்டு ஒழுங்காக செயல்படாத போது உடலில் போதுமான தைராய்டு ஹார்மோனை உற்பத்தியாவதில்லை. இது கொஞ்சம் கொஞ்சமாக உடலின் மெடபாலிக் நடவடிக்கையை மெதுவாக்கி பல அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. சில சமயங்களில் இது வேறு உடல்நலக் குறைபாடுகள் வந்துவிட்டதோ என தவறாக நினைக்க வைத்துவிடும்.
சில முக்கியமான அறிகுறிகள் இதோ..
வழக்கமான டயட் மற்றும் உடற்பயிற்சி செய்தாலும் காரணமின்றி உடல் எடை குறைதல்
எப்போதும் மந்தமாகவும், சோர்வாகவும் உணர்வது
அதிக குளிர் ஒத்துக்கொள்ளாது.
தோல் மற்றும் தலைமுடி வறண்டு போவது. மாய்ஸசரைசர் பயன்படுத்தினால் பலனளிக்காமல் போகும். முடி எளிதில் உடைந்து போகும்.
தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி
அடிக்கடி மறந்து போவது. மன அழுத்தத்தோடு இருப்பது.
செரிமானப் பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல்
சீரற்ற மாதவிடாய் சுழற்சி அல்லது ரத்தப்போக்கு அதிகமாக இருப்பது
இதை குணப்படுத்துவதற்கான முதல் படி விழிப்புணர்வு. தைராய்டு செயலிழப்பு குறித்த அறிகுறிகளை பெண்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதை உறுதி செய்ய மருத்துவர்களின் ஆலோசனையை கேட்க வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும்.
No comments:
Post a Comment