நமது உணவுப் பழக்க வழக்கங்கள் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக ரத்த சர்க்கரை அளவுகளை பராமரிப்பது மிகவும் அவசியம். உதாரணமாக அதிக பொட்டாசியம் கொண்ட உணவுகளை சாப்பிடுவது நீரழிவு நோயாளிகளில் இதயம் சம்பந்தப்பட்ட அபாயங்களை அதிகரிக்கலாம்.
எனினும், நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை மற்றும் உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம். இப்போது ஓரளவு நமது அன்றாட உணவின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டிருப்பீர்கள். இப்போது நீரழிவு நோயாளிகள் தங்களுடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இது அவர்களுடைய ரத்த சர்க்கரையை அளவுகளை பராமரிக்க மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
நார்ச்சத்து ரத்த குளுக்கோஸ் அளவுகளை சீராக்கி உடலில் சர்க்கரை உறிஞ்சப்படும் செயல் முறையை மெதுவாக்குகிறது. நார்ச்சத்து இரண்டு வகைப்படும். பழங்கள், பீன்ஸ், ஓட்ஸ் போன்றவற்றில் நீரில் கரையும் நார்சத்துக்கள் காணப்படுகிறது. அதே நேரத்தில் முழு தானியங்கள் மற்றும் நட்ஸ் வகைகளில் காணப்படும் நீரில் கரையாத நார்ச்சத்து செரிமானத்தை தூண்டி, வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கிறது.
மெக்னீசியம் சத்து இன்சுலின் உணர்திறன் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பெரும்பாலும் குறைந்த மெக்னீசியம் அளவுகளை கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பச்சை இலை காய்கறிகள், நட்ஸ் வகைகள், விதைகள் மற்றும் முழு தானியங்களில் மெக்னீசியம் அதிகம் காணப்படுகிறது.
நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுவது தவிர வைட்டமின் டி சத்து குளுக்கோஸ் மெட்டபாலிசம் மற்றும் இன்சுலின் உணர்திறன் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ஆகவே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதற்கு நீங்கள் தினமும் உங்களை சூரிய வெளிச்சத்துக்கு வெளிப்படுத்திக் கொள்வதன் மூலமாக வைட்டமின் டி சத்தை பெறலாம். இது தவிர கொழுப்பு மீன்கள் மற்றும் முட்டைகளில் இந்த வைட்டமின் காணப்படுகிறது.
குரோமியம் என்ற தாது இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், வழக்கமான குளுக்கோஸ் மெட்டபாலிசத்தை பராமரிப்பதற்கும் அவசியமாகும். பச்சை பீன்ஸ், ப்ராக்கோலி, பார்லி, ஓட்ஸ் மற்றும் பாதாம் பருப்புகள் குரோமியத்தின் சிறந்த மூலங்களாக அமைகின்றன.
ரத்த சர்க்கரையை அளவை கட்டுப்படுத்துவதில் ஜிங்க் முக்கிய பங்கு கொண்டுள்ளது. எனினும் இதனை நீங்கள் சரியான அளவுகளில் சாப்பிட வேண்டும். இறைச்சி, பருப்பு வகைகள், விதைகள் மற்றும் நட்ஸ் வகைகளில் ஜிங்க் காணப்படுகிறது.
திரவ சமநிலையை பராமரித்து நரம்பு சிக்னல்களை சீரமைப்பதற்கு அவசியமான பொட்டாசியம், ஹைப்பர் டென்ஷன் அபாயம் கொண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு அவசியமான ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு கொண்டுள்ளது. வாழைப் பழங்கள், ஆரஞ்சு பழங்கள், உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் கீரை வகைகளில் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊட்டச்சத்துக்களைத் தவிர ஆன்டி-ஆக்சிடன்ட்களும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் அவசியம். நீரிழிவு நோயாளிகளில் பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராடுவதற்கு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தேவை. ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட், கீரை வகைகள் போன்றவற்றில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் காணப்படுகிறது.
ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைப்பதற்கு நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள்.
வழக்கமான முறையில் உங்களுடைய ரத்த குளுக்கோஸ் அளவுகளை சரி பார்க்கவும். இதனால் உங்களுடைய உணவு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகளில் அதற்கு ஏற்ப மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
சரிவிகித உணவில் கவனம் செலுத்தவும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை நிறைந்த பானங்களை தவிர்க்கவும்.
தொற்றுகள் ஏற்படுவதை தவிர்க்க சரியான பாத பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றவும்.
வாக்கிங் செல்வது, சைக்கிள் ஓட்டுவது அல்லது நீச்சல் போன்ற செயல்பாடுகள் மூலமாக உடலை எப்பொழுதும் ஆக்டிவாக வைத்துக் கொள்ளுங்கள்.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
0 Comments:
Post a Comment